Vishal: பிரசாந்தை பார்த்து பொறாமை.. அவரின் படங்களை வியந்து பார்த்திருக்கிறேன் – விஷால் பேச்சு!

Vishal About Prashanth: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். இவர் சமீபத்தில் பிரசாந்தின் ரஞ்ஜன் பட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தனர். அதில் அவர், நடிகர் பிரஷாந்த் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Vishal: பிரசாந்தை பார்த்து பொறாமை.. அவரின் படங்களை வியந்து பார்த்திருக்கிறேன் - விஷால் பேச்சு!

பிரசாந்த் மற்றும் விஷால்

Updated On: 

06 Apr 2026 18:40 PM

 IST

நடிகர் விஷால் (Vishal) தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவர் தற்போது சுந்தர் சி (Sundar C) இயக்கத்தில் புருஷன் (Purushan) என்ற படத்திலும், தனது இயக்கம் மற்றும் நடிப்பில் மகுடம் (Magudam) என்ற படத்திலும் பிசியாக இருந்துவருகிறார். இதில் இவர் புருஷன் திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்துவரும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026 மே அல்லது ஜூன் மாதத்திற்குள் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிடும். இதை அடுத்ததாக இந்த 2026ம் ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இன்று 2026 ஏப்ரல் 6ம் தேதியில், நடிகர் பிரசாந்தின் (Prashanth) பிறந்தநாள் மற்றும் பட விழாவில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துகொண்டிருந்தார். அதில் அவர் பேசுகையில், நடிகர் பிரஷாந்த் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்… நீளிரா திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ!

ரஞ்ஜன் பட நிகழ்ச்சியில் பிரஷாந்த் குறித்து புகழ்ந்து பேசிய விஷால் :

அந்த நிகழ்ச்சியில் விஷால் பேசுகையில், “நான் உதவி இயக்குநராக பணியாற்றிவரும்போதே, பிரசாந்தின் திருடா திருடா, செம்பருத்தி மற்றும் அதற்கு முன் உள்ள படங்களை எல்லாம் பார்த்து ரசித்திருக்கிறோம். அவரின் திரைப்படங்களை திரையரங்கு சென்று பார்த்து ரசித்திருக்கிறேன். அப்போது எங்கெல்லாம் பொறாமை. திரையரங்குகளில் எனது பக்கத்தில் இருக்கும் பெண்கள் எல்லாருமே, பிரசாந்தை பார்த்து ரசிப்பார்கள்.

இதையும் படிங்க: தென்னிந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அதிரடி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

என் நிறத்திற்கு எல்லாமே லேட்டாதான் கிடைக்கும். ஆனால் பிரஷாந்த் கலருக்கு எல்லாம் சீக்கிரம் கிடைச்சுடும். அப்போதெல்லாம் அவரை பார்க்கும்போதே பொறாமையாக இருக்கும். தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்துக்கொண்டே இருப்பாரு” என அதில் அவர் பேசியிருந்தார்.

பிரஷாந்த் குறித்து நடிகர் விஷால் பேசிய வீடியோ பதிவு:

நடிகர் பிரஷாந்த் இன்று 2026 ஏப்ரல் 6ம் தேதியில் தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடிக்கவுள்ள, புது படமான ரஞ்ஜன் படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. இதில் பிரஷாந்த் நாயகனாக நடிக்க, அவருடன் தேவயானியின் மகள் பிரியங்கா ராஜகுமாரன், ஹரி போன்ற நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படம் தெலுங்கில் வெளியான தி கோர்ட் படத்தின் தமிழ் ரீமேக் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்