Vishal35 : விஷால் – துஷாரா விஜயனின் புதிய படம்.. ஷூட்டிங் அப்டேட்!

Vishal 35 Movie Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஷால். இவரின் நடிப்பில் 35வது படத்தின் பூஜைகள் சமீபத்தில் நடைபெற்றிருந்தது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடிக்கவிருக்கும் நிலையில், இந்த புதிய படத்தின் ஷூட்டிங் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.

Vishal35 : விஷால் - துஷாரா விஜயனின் புதிய படம்.. ஷூட்டிங் அப்டேட்!

விஷால் மற்றும் துஷாரா விஜயன்

Published: 

01 Aug 2025 21:30 PM

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் விஷால் (Vishal). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே (Chellame) என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதை அடுத்ததாகத் தொடர்ந்து படங்களில் முன்னணி நாயகனாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மத கஜ ராஜா (Madha Gaja Raja). இயக்குநர் சுந்தர் சியின் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியாகவிருந்த இப்படமானது, 12 வருடங்களுக்குப் பிறகு கடந்த 2025ம் ஆண்டு ஜனவரியில் வெளியானது. இந்த படத்தை அடுத்ததாக, தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் ரவி அரசு (Ravi Arasu) இயக்கத்தில், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பில் விஷால்35 (Vishal 35) என்ற படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் பூஜை சமீபத்தில் நடைபெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இன்று 2025, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் , சென்னை பூந்தமல்லியில் தொடங்கியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : புது கிளைமேக்ஸுடன்.. ரசிகர்களைக் கவரும் தனுஷின் ‘அம்பிகாபதி’ திரைப்படம்!

நடிகர் விஷால் வெளியிட்ட புதிய படத்தின்  பூஜை புகைப்படங்கள்


விஷால் 35 திரைப்படம்

விஷாலின் இந்த 35வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் (Dushara Vijayan) நடித்துவருகிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக இணையும் முதல் படமாகவும். இயக்குநர் ரவி அரசு இப்படத்தை இயக்கிவருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் ஈட்டி மற்றும் ஐங்கரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களைத் தொடர்ந்து, தற்போது விஷாலின் 35வது படத்தில் இயக்குநராக இணைந்துள்ளார்.

இதையும் படிங்க : பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் கிங்டம் படம்.. முதல் நாள் வசூல் விவரம்!

இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் நடிகர் ஜீவா தயாரித்து வருகிறார். இப்படம் அந்த நிறுவனத்தின் கீழ் உருவாகும் 99வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.

விஷாலின் திருமணம் :

நடிகர் விஷாலும், பேராண்மை படப் புகழ் நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வதாகவும் சமீபத்தில் பட நிகழ்ச்சி ஒன்றில், நடிகை சாய் தன்ஷிகா அறிவித்திருந்தார். இவர்கள் இருவரும் 2025 ஆகஸ்ட் 29 தேதியில் விஷாலின் பிறந்தநாளை ஒட்டி திருமணம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவரின் திருமணத்தை, ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவும் எதிர்பார்த்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.