அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு – வைரலாகும் அப்டேட்
Actor Vikram Prabhu Next Movie Update Viral On Social Media: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் விக்ரம் பிரபு. இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குநர் சித்தார்த், ராகுல் மற்றும் விக்ரம் பிரபு
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் விக்ரம் பிரபு. இவர் நாயகனாக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் பெரிய அளவில் இவரது படங்கள் வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில் சமீப காலமாக நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் சிறை. உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
மேலும் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ஓடிடியிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விக்ரம் பிரபு எந்தப் படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு:
அதன்படி பிரபல தயாரிப்பு நிறுவமனாமான ரோமியோ பிசர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ராகுல் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலம் சித்தார்த் என்பவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆக உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து அறிமுக இயக்குநர்களின் படங்களில் நடித்து வரும் நடிகர் விக்ரம் பிரபுவின் இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தின அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தயாரிப்பாளர் ராகுல் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Get ready for the NEXT BIGGIE 🔥 from @Romeopictures_
Happy to be associated with
MY BROTHER @iamVikramPrabhu 🤝And introducing the most promising debutant director, #Siddharth ✨
More updates coming very soon! pic.twitter.com/uJNulVGLRm
— raahul (@mynameisraahul) April 20, 2026
Also Read… 12 ஆண்டுகளை நிறைவு செய்தது வடிவேலுவின் தெனாலிராமன் படம்