விஜய் சேதுபதி நடிப்பில் ஓடிடியில் வெளியாகி உள்ள முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Vijay Sethupathis Muthu Engira Kaattaan Web Series Review: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இணையதளத்தில் தற்போது வெளியாகி உள்ள இணையதள தொடர் முத்து என்கிற காட்டான். இந்த தொடர் எப்படி இருக்கிறது என்பது குறித்து விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

காட்டான்
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து திரைப்படங்கள் மட்டும் இன்றி இணையதள தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இதுவரை பல இணையதள தொடர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ஓடிடியில் வெளியாகி உள்ள இணையதள தொடருக்கு முத்து என்கிற காட்டான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள தொடர் நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது. மொத்தம் 10 எபிசோடுகளைக் கொண்டுள்ள இந்த தொடர் எப்படி இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம்.
இந்த காட்டான் தொடரை இயக்குநர் எம் மணிகண்டன் எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், கலைவாணி பாஸ்கர், ரிஷா ஜேக்கப்ஸ் மோனிகா, முத்துக்குமார், வடிவேல் முருகன், சிங்கம் புலி, அபி நட்சத்திரா,பாலாஜி சக்திவேல், விஜே பார்வதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியான இந்த தொடர் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
விஜய் சேதுபதியின் காட்டான் வெப் சீரிஸ் எப்படி இருக்கு?
அதன்படி தென் தமிழகத்தில் உள்ள கிராமத்தில் மூன்று வருடங்களாக எந்த வழக்குகளும் பதிவாகாமல் இருந்ததால் ஒரு காவல் நிலையத்தை மூட அரசு முடிவு செய்து இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் அந்த ஊரில் ஒரு உடலில்லாத தலை மட்டும் கிடைக்கின்றது. அந்த தலை விஜய் சேதுபதியுடயது. மேலும் தலை மட்டும் சிரித்த முகத்துடன் இருப்பது மிகுந்த கேள்வியை எழுப்பும் விதமாக உள்ளது. இந்த சீரிஸில் விஜய் சேதுபதிக்கு முத்து என்று பெயர் வைக்கபட்டுள்ளது.
Also Read… தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இணையத்தில் வைரலாகும் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி?
அந்த தலையை வைத்துக்கொண்டு உடலை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் உடல் கிடைக்கவில்லை. பிறகு அந்த முத்துவின் தலையை புகைப்படமாக எடுத்து அதனை வைத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தமிழ்நாடு கேரளா என இரண்டு மாநிலங்களுடன் தொடர்புடையாத இருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க விசாரிக்க மற்ற கொலைகளுக்கான லீட்களும் காவல்துறையினருக்கு கிடைக்கின்றது.
இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த வெப் சீரிஸின் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் காவல்துறையினராக நடித்த முத்துகுமார் மற்றும் சிங்கம்புலி காம்போ மற்றும் ஊர் பெரியவராக நடித்த பாலாஜி சக்திவேல் மிகவும் சுவாரஸ்யமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த தொடரை நிச்சயமாக மிஸ் செய்யாமல் பாருங்கள்.
Also Read… தனுஷ் 55 படத்தில் மம்முட்டின் கதாப்பாத்திரம் இதுவா? வைரலாகும் தகவல்