Vijay Sethupathi: துரந்தர் படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது – விஜய் சேதுபதி பேச்சு!

Vijay Sethupathi About Dhurandar Movie: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி. இவர் திரைப்படங்களை தொடர்ந்து வெப் தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இவர், ரன்வீர் சிங்கின் துரந்தர் படம் பற்றி பேசியுள்ளார்.

Vijay Sethupathi: துரந்தர் படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது - விஜய் சேதுபதி பேச்சு!

விஜய் சேதுபதி மற்றும் ரன்வீர் சிங்

Updated On: 

15 Mar 2026 15:15 PM

 IST

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) கோலிவுட் சினிமாவை கடந்து தற்போது தெலுங்கு சினிமாவிலும் படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார். இவரின் நடிப்பில் தெலுங்கில் ஸ்லம் டாக் (Slum Dog) என்ற படமானது தயாராகியுள்ளது. இதை தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Director Puri Jagannath) இயக்க, விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனன் (Samyuktha Menon) நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. மேலும் இதன் ரிலீஸ் தேதி எப்போது என படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர்தான் “முத்து என்கிற காட்டான்” (Muthu Engira Kaattaan).

இந்த வெப் தொடர்நது திரில்லர் கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், வரும் 2026 மார்ச் 27ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த விஜய் சேதுபதி, ரன்வீர் சிங்கின் துரந்தர் (Dhurandar) படம் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: எனது மற்ற படங்களை விட அரசன் பட ஷூட்டிங் விரைவில் முடியும் – இயக்குநர் வெற்றிமாறன்

இந்தி திரைப்படங்கள் குறித்து விஜய் சேதுபதி பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதிஇடம் இந்தி படங்களில் இருக்கும் எதார்த்தம் தென்னிந்திய சினிமாவில் ஏன் இல்லை? பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “ஒருபோதும் நான் அப்படி நினைக்கவில்லை. மலையாள சினிமாவை ஒப்பிடும்போது தமிழ் திரைப்படத் துறையிலும் இதேதான் நடக்கிறது. அதுபோல் இந்தியில் சமீபத்தில் வெளியான துரந்தர் படமானது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. அந்த படம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: விடுதலை படத்தின் ஷூட்டிங்கிலேயே வெற்றிமாறன் அரசன் படத்தின் கதையை கூறினார் – விஜய் சேதுபதி சொன்ன விசயம்

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட காட்டான் வெப் தொடரின் ட்ரெய்லர் குறித்த பதிவு:

இந்த காட்டான் வெப் தொடரில் விஜய் சேதுபதி முன்னணி நாயகனாக நடித்துள்ளார். இதை இயக்குநர் எம்.மணிகண்டன் இயக்கியுள்ளார். இது விஜ சேதுபதியின் நடிப்பில் வித்தியாசமான கதையில் உருவாகியுள்ளது. வெப் தொடரை போன்று இது வெளியாகவும் நிலையில், கிட்டத்தட்ட 8 எபிசோடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது வரும் 2026 மார்ச் 27ம் தேஹி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
நேதாஜியின் தொப்பியை காணவில்லை - பேரன் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸ் வழியாக பாதுகாப்பாக செல்லலாம் - அனுமதி வழங்கிய ஈரான்
இந்திய சகோதரர்களுக்கு அமெரிக்காவில் 400 ஆண்டுகள் சிறை தண்டனை
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - இன்ஃபோசிஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு