Thalaivan Thalaivii : வித்தியாசமான காதல் கதை… ‘தலைவன் தலைவி’ ட்ரெய்லர் இதோ!

Thalaivan Thalaivii Movie Trailer : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் உருவாகியிருக்கும் படம்தான் தலைவன் தலைவி. விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனும் முன்னணி நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. கணவன் மனைவி மற்றும் குடும்ப கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Thalaivan Thalaivii : வித்தியாசமான காதல் கதை... தலைவன் தலைவி ட்ரெய்லர் இதோ!

தலைவன் தலைவி படத்தின் டிரைலர்

Updated On: 

17 Jul 2025 17:16 PM

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) . இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக ஏஸ் (Ace) திரைப்படம் வெளியானது. இப்படமானது கலவையான விமர்சனங்களைப் பெற்றி தோல்வியைச் சந்தித்தது என்றே கூறலாம். இந்த படத்தை அடுத்ததாக விஜய் சேதுபதியின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த படத்தைத் தமிழ் பிரபல இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraaj) இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் மற்றும் நடிகை நித்யா மேனனும் (Nithya Menon) இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (Santosh Narayanan) இசையமைத்திருக்கும் நிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படமானது கணவன் மனைவி விவாகரத்து, ஹோட்டல் மற்றும் குடும்பம் என மொத்த கலவையான திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : ‘கூலி’ படத்தின் கதை இதுவா? இணையத்தில் கசிந்த தகவல்!

தலைவன் தலைவி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் பதிவு :

தலைவன் தலைவி படம் உண்மையான கதை :

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சமீபத்தில் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது பேசிய இயக்குநர் பாண்டிராஜ். இந்த தலைவன் தலைவி திரைப்படமானது, ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியிருப்பதாகக் கூறியிருந்தார். அவர் இந்த படத்தின் கதைக்களம் கணவன் மனைவியின் விவாகரத்து பற்றியும், விவாகரத்திற்கு முன் அவர்கள் இருந்த வாழ்க்கையைப் பற்றியும் உருவாகியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கவினுடன் ஜோடியாகும் பிரியங்கா மோகன்.. புதிய படத்தின் அப்டேட் இதோ!

மேலும் இப்படத்தில் குடும்பம் சார்ந்த கதைகளும் இருப்பதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்திவருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் தீபா சங்கர், ரோஷிணி ஹரிப்ரியன், பால சரவணன், யோகி பாபு என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ட்ரெண்டிங்கில் தலைவன் தலைவி பாடல் :

இந்த தலைவன் தலைவி திரைப்படமானது, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தெலுங்கு தலைப்பு “சார் மேடம்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘பொட்டல முட்டையே’ என்ற பாடல் இணையத்தில் ட்ரென்டிங் பட்டியலிலிருந்து வருகிறது. இப்படம் வரும் 2025, ஜூலை 25ல் வெளியாகவுள்ள நிலையில், எதிர்பார்ப்புகளைத் தூண்டி வருகிறது.