திருமண தேதியை முடிவு செய்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி… வைரலாகும் தகவல்

Vijay Deverakonda and Rashmika Mandana: பல ஆண்டுகளாக சினிமா துறையில் காதலர்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரின் திருமண தேதி இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் திருமண பத்திரிகை ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

திருமண தேதியை முடிவு செய்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி... வைரலாகும் தகவல்

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா

Updated On: 

25 Feb 2026 22:10 PM

 IST

சினிமா துறையில் தொடர்ந்து ஒன்றாக நடிக்கும் நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்வது வழக்கமாக உள்ளது. அதன்படி தமிழ் சினிமாவில் பல காதல் ஜோடிகள் தற்போதுவரை பலருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் மற்ற மொழிகளில் உள்ள நடிகர்களும் தொடர்ந்து காதலித்து திருமணம் செய்துக்கொண்டே இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் தெலுங்கு சினிமாவில் இணைந்து பலப் படங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களின் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் ஜோடியாக வலம் வந்த இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர உள்ள செய்தி வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த சில ஆண்டுகளாக விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து வருவதாக இணையத்தில் செய்திகள் பரவி வந்தது. மேலும் இருவரும் பொது இடங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் தொடர்ந்து வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் திருமண நிச்சயம் நடைப்பெற்றதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதுகுறித்து அவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

திருமண தேதியை முடிவு செய்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி:

இந்த நிலையில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் வருகின்ற 26-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து 4-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு பிரமாண்டமாக திருமண வரவேற்பு நடைபெற உள்ளதாகவும் திருமண பத்திரிகை ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதுகுறித்து விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடிக்கும் பிரியா பவானி சங்கர்… வெளியானது கேரக்டர் போஸ்டர்

இணையத்தில் வைரலாகும் திருமண பத்திரிகை:

Also Read… வேட்டுவம் படத்தில் ஒரு வித்யாசமான தினேஷை பார்ப்பீங்க – இயக்குநர் பா ரஞ்சித்

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்