Maargan :விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ திரைப்படம் எப்படி இருக்கிறது? எக்ஸ் விமர்சனம் இதோ!

Maargan Movie X Review : நடிகர் விஜய் ஆண்டனியின் முன்னணி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் மார்கன். இந்த படமானது முற்றிலும் கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கிறது. இன்று 2025, ஜூன் 27ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இப்படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

Maargan :விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் எப்படி இருக்கிறது? எக்ஸ் விமர்சனம் இதோ!

மார்கன் திரைப்படம் எக்ஸ் விமர்சனம்

Published: 

27 Jun 2025 14:54 PM

இயக்குநர் லியோ ஜான் பால் (Leo John Paul) இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் மார்கன் (Maargan). இந்த படத்தில் முன்னணி கதாநாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony) நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக மட்டுமல்லாமல், இப்படத்தை தயாரித்து,  இசையமைக்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் (Police) அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படமும் முழுக்க இன்வெஸ்டிகேஷன் திரில்லர் திரைப்படமாகவே உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக விஜய் ஆண்டனியின் சகோதரியின் மகன் அஜய் தேஷன் (Ajay Deshan) நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம்தான் இவர் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது, உலக அளவில் சுமார் 1000 ஸ்கிரீனில் ஜூன் 27, 2025 அன்று வெளியாகியுள்ளது.

நடிகர்களின் நடிப்பு எப்படி இருக்கிறது?

இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பும், வில்லனாக நடித்திருந்த அஜய் தேஷனின் நடிப்பும் மிக அருமையாக இருக்கிறது. அஜய் தேஷன் இப்படத்தில்தான் நடிகராக அறிமுமாகியிருக்கும் நிலையில், இப்படம் அவருக்கு நல்ல ஓப்பனிங்கை கொடுத்துள்ளது. மேலும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் விஜய் ஆண்டனி சம்பவம் செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இயக்குநரின் கதை எப்படி இருக்கிறது :

இந்த படத்தில் இயக்குநர் லியோ ஜான் பாலின் இயக்கம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. அவர் கதை சொல்லும் விதம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. மேலும் இந்த படமானது ஆரம்பத்திலே அதிரடி ஆக்ஷ்னுடன் ஆரம்பமாகிறதாகவும், ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச்செய்வது போல இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாம்.

மார்கன் படத்தின் முக்கியாயத்துவம் என்ன :

விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின், ஆரம்பம் முதல் படத்தின் கதைக்குள் ஆடியன்ஸை அழைத்தது செல்கிறதாம். மற்ற படங்களை போல தேவையில்லத்தைக் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது, விஜய் ஆண்டனியை போல, நடிகர் அஜய் தேஷனின் ரோலும் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.