Nooru Saami: எமோஷனல் பேமிலி கதையில்.. விஜய் ஆண்டனி – ஸ்வாசிகவின் நூறு சாமி பட டீசர் இதோ!
Nooru Saami Movie Teaser: நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் சிறப்பாக தயாராகியுள்ள படம்தான் நூறு சாமி. இதை இயக்குநர் சசி இயக்கியுள்ள நிலையில், முற்றிலும் பேமிலி எமோஷனல் கதையில் தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

நூறு சாமி திரைப்பட டீசர்
தமிழ் சினிமாவில் அம்மா மகன் பாசம் மற்றும் குடும்பம் எமோஷனல் போன்ற கதையில் படங்களை எடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் சசி (Director Sasi). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் குறைவான படங்கள் வெளியானாலும், சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி (Vijay Antony) நடித்துள்ள புது திரைப்படம்தான் “நூறு சாமி” (Noou Saami). விஜய் ஆண்டனி மற்றும் சசியின் கூட்டணியில் ஏற்கனவே பிச்சைக்காரன் என்ற படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 2வது முறையாக நூறு சாமி படத்தில், விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசி கூட்டணி இணைந்துள்ளது. நூறு சாமி படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது.
அந்த வகையில் இப்படத்தின் முதல் பார்வை, முதல் பாடல் என வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. இந்த வரிசையில் தற்போது, இப்படத்தின் எமோஷனல்டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டீசரை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) மற்றும் பா. ரஞ்சித் (Pa.Ranjith) தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: சல்மான் கானுடன் ஜோடி.. சம்பளத்தில் புதிய உச்சம் தொட்ட நயன்தாரா!
விஜய் ஆண்டனி வெளியிட்ட நூறு சாமி படத்தின் டீசர் குறித்த எக்ஸ் பதிவு:
Conflicts. Opinions. Everything about ‘இக்கு / చుక్క’ ! ⚜️
Presenting the emotions-packed teaser of #Noorusami / #VandaDevullu.
🔗 https://t.co/Kvj4Cnh97Y
🔗 https://t.co/4NittriKExA #FamilyBiopic.@vijayantony #Sasi @vijayantonyfilm #Swasika @AJDhishan990 @karunaasethu… pic.twitter.com/nSbOw9UsUs
— vijayantony (@vijayantony) April 4, 2026
நூறு சாமி படத்தின் டீசர் எப்படி இருக்கு:
இந்த நூறு சாமி படத்தின் நடிகர் விஜய் ஆண்டனி லீட் ஹீரோவாக நடித்திருந்தாலும், நடிகை ஸ்வாசிகாவின் கதாபாத்திரமே ஆதிக்கம் செலுத்துகிறது. கணவனை இழந்த தாய், தான் குழந்தைக்காக செய்யும் விஷயத்தை மையமாக கொண்டு இந்த டீசர் அமைந்துள்ளது. இதில் நடிகை ஸ்வாசிகா முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார் என்பது இந்த் டீசரில் தெரிகிறது.
நூறு சாமி படத்தின் கதை :
இந்த நூறு சாமி படமும் ஒரு அம்மா மற்றும் மகனின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் ஸ்வாசிகா இருவரும் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் இவர்களின் மகனாக பூக்கி பட நடிகர் அஜய் திஷன் நடித்திருப்பதாக தெரிகிறது. ஒரு தனியாக ஒரு தாய் தனது பிள்ளையை வளர்க்க கஷ்டப்படுவதை மையமாக கொண்டு இப்படத்தின் கதை தயாராகியுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் மற்றும் விஜயிடம் உள்ள அதே ஸ்டைல் நயன்தாராவிடம் உள்ளது – இயக்குநர் விஷ்ணு எடவன்
இதில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, லிஜோமோல் ஜோஸ், அஜய் திஷன், கருணாஸ், முனீஸ்காந்த், வித் லவ் பட நடிகை காவ்யா அனில் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2026 மே 1ம் தேதியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் தற்போது வெளியான இந்த டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.