கர படம் பத்தோடு பதினொன்னா இருக்காது – இயக்குநர் விக்னேஷ் ராஜா

Director Vignesh Raja: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கர படம் பத்தோடு பதினொன்னா இருக்காது - இயக்குநர் விக்னேஷ் ராஜா

கர

Published: 

26 Mar 2026 11:06 AM

 IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. இவர் முன்னதாக தமிழ் சினிமாவில் போர் தொழில் என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இவர் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஆர்.சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், நிழல்கள் ரவி, சரத் ​​பாபு, ஹரிஷ் குமார் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். க்ரைம் த்ரில்லர் பாணியில் திரையரங்குகளில் வெளியான இந்த போர் தொழில் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் ராஜா தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் தொழில் படத்தை தொடர்ந்து விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகி உள்ள படம் தான் கர. இந்த கர படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

கர படம் எனது திரைப்பயணத்தில் முக்கியமான ஒன்றாக இருக்கும்:

இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, தனுஷ் சார், பல விதங்களில் வடிவமைத்து, பல்வேறு பரிமாணங்களில் ஆராய்ந்து பார்க்கக்கூடிய ஒரு நடிகர் ஆவார். கர என்பது ஒரு வழக்கமான அல்லது சம்பிரதாயபூர்வமான கதையாகக் கருதப்படக்கூடிய ஒன்றல்ல. உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய மற்றும் அர்த்தமுள்ள ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற ஆழ்ந்த பொறுப்புணர்வுடன் நான் இப்படத்தை உருவாக்கினேன். எனது திரைப்பயணத்தின் இத்தருணத்தில், இப்படம் எனக்கு மிகவும் முக்கியமானதாகும். மிகுந்த உணர்வு ஆழத்துடனும், வலுவான கதை சொல்லும் திறனுடனும் நான் இக்கதையை அணுகினேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read… ரஜினிகாந்தின் அந்த படத்திற்கு நான் தான் முதலில் பேசப்பட்டேன் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

இணையத்தில் வைரலாகும் இயக்குநர் விக்னேஷ் ராஜா பேச்சு:

Also Read… நானி சார் எழுப்பும் சுவரில் ஒரு செங்கலாக இருக்க விரும்புகிறேன் – கென் கருணாஸ்

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..