எனது அடுத்தப் படம் சிம்பு உடன் தான்… வாடிவாசல் தாமதம் ஆக இதுதான் காரணம் – வெற்றிமாறன்

Director Vetrimaran about Simbu Movie: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் பட்டியளில் இருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன். இவர் அடுத்ததாக யார் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்திருந்தனர். இந்த நிலையில் தற்போது சிம்பு உடனான கூட்டணியை இயக்குநர் வெற்றிமாறன் உறுதி செய்துள்ளார்.

எனது அடுத்தப் படம் சிம்பு உடன் தான்... வாடிவாசல் தாமதம் ஆக இதுதான் காரணம் - வெற்றிமாறன்

வெற்றிமாறன்

Updated On: 

30 Jun 2025 12:12 PM

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் வெற்றிமாறன் (Director Vetrimaaran) இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை பாகம் இரண்டு. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் எந்த நடிகரை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். முன்னதாக சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் நடிகர் சூர்யா ரெட்ரோ படத்தை தொடர்ந்து, கருப்பு சூர்யா 46 என்று அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட்டாகி நடித்து வருகிறார். தொடர்ந்து அந்தப் படங்களின் அறிவிப்புதான் வெளியானதே தவிற வெற்றிமாறன் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமலே இருந்தது.

சிம்புவின் படம் தான் அடுத்த இயக்க போறேன் – வெற்றிமாறன்:

இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் அளித்தப் பேட்டி ஒன்றில் வாடிவாசல் படம் தற்போது எடுக்கவில்லை என்பதும் நடிகர் சிலம்பரசன் படத்தை தான் முதலில் இயக்க உள்ளதாகவும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இந்தப் படம் வடசென்னை 2 என்று வதந்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய வெற்றிமாறன் சிம்புவின் படம் வடசென்னை பகுதியை மையப்படுத்தி இருக்கும்.

ஆனால் வடசென்னை பாகம் 2 என்பது தனுஷ் மட்டும் தான். அது நிச்சயமாக அன்புவின் எழுச்சியாகதான் இருக்கும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன் சிம்பு உடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துவிட்டதாகவும், இந்தப் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் கவனம் பெறும் வெற்றிமாறனின் பேச்சு:

வாடிவாசல் படம் தாமதமாக காரணம் இதுதான்:

சூர்யா நடிப்பில் உருவாக இருந்த வாடிவாசல் படம் தாமதம் ஆக காரணம் கதை மற்றும் தொழில்நுட்ப விசயங்கள் என்று தெரிவித்துள்ளார். அதில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதற்கான பணிகள் நிறைவடைந்த பிறகு அந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் என்றும் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.