Arasan Movie: சிலம்பரசனின் ‘அரசன்’ திரைப்படத்தின் 2வது கட்ட ஷூட்டிங் தொடக்கம்!
Arasan Movie Shooting Update: கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிலம்பரசன். இவர் தற்போது வெற்றிமாறனின் இயக்கத்தில், அரசன் திரைப்படத்தின் நடித்துவரும் நிலையில், இதன் 2வது கட்ட ஷூட்டிங் இன்று 2026 பிப்ரவரி 20ம் தேதியில் தொடங்கியுள்ளதாம். இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

அரசன் திரைப்பட படப்பிடிப்பு
தமிழில் பிரபல கதாநாயகனாக கலக்கிவருபவர் நடிகர் சிலம்பரசன் (Silambarasan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்கள் தயாராகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில், இதில் கமல்ஹாசனுடன் (Kamal Haasan) இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது இவர்களுக்கு கலவையான விமர்சனங்களைக் கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்தாக தேசிய விருது பெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் (Ramkumar Balakrishnan) கூட்டணியில் புது படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. பின் தயாரிப்பு நிறுவனத்தில் சில பிரச்சனைகள் காரணமாக இப்படத்தின் ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டது. இதன் காரணமாக நடிகர் சிலம்பரசன் உடனடியாக இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaran) இயக்கத்தில் இணைந்தார். இப்படத்திற்கு படக்குழு “அரசன்” (Arasan) என டைட்டில் வைத்திருந்தது.
இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக கோவில்பட்டி பகுதியில் நடந்த நிலையில், இன்று 2026 பிப்ரவரி 20ம் தேதியில் சென்னையில் இப்படத்தின் இரண்டாவதுகட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இது குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: கார்த்தியின் கைதி 2 திரைப்படம் உருவாகிறதா? – இணையத்தில் வைரலாகும் தகவல்!
அரசன்பட இரண்டாவது கட்ட ஷூட்டிங் தொடக்கம் தொடர்பான பதிவு:
Second schedule of #Arasan started today in Chennai.. 🔥
Mega actors combination scenes will be shot in this phase..3BHK , My Lord fame Chaithra is also part of the film. 👌🏼#SilambarasanTR pic.twitter.com/aL0Q01gmBC
— Flim Updates⚕️ (@Dasarathan_1720) February 20, 2026
அரசன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபலங்கள் :
இந்த அரசன் திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துவரும் நிலையில், அவருக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கவுள்ளார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, டீஜெய் மற்றும் டூரிஸ்ட் பேமிலி பட புகழ் யோகலட்சுமி போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இந்நிலையில் மேலும் இப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் முக்கியாய் வேடத்தில் நடித்துவருகிறாராம். அவர் வேறுயாருமில்லை, 3BHK மற்றும் மை லார்ட் படத்தில் நடித்த கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார்தான்.
இதையும் படிங்க: கமல்ஹாசன்- ரஜினிகாந்த் கூட்டணி பட புரோமோ வீடியோ எப்போது?- அறிவிப்பு இதோ!
இவர் இப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அரசன் படமானது வட சென்னை படத்தின் பின்னணி கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், இதை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துவருகிறார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் நிலையில், 2026ம் ஆனது தீபாவளியை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.