எந்த அடிப்படையில் தேசிய விருது கொடுக்கப்படுகிறது?- நடிகை ஊர்வசி கண்டனம்!

Urvashi : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ஊர்வசி. இவருக்குச் சமீபத்தில் உள்ளொழுக்கு படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான சேதிய விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தனக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்காதது குறித்து நடிகை ஊர்வசி தேசிய திரைப்பட விருதுகள் குழுவிற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எந்த அடிப்படையில் தேசிய விருது கொடுக்கப்படுகிறது?- நடிகை ஊர்வசி கண்டனம்!

நடிகை ஊர்வசி

Published: 

04 Aug 2025 19:36 PM

நடிகை ஊர்வசியின் (Urvashi) நடிப்பில், தமிழ், மலையாள, தெலுங்கு என பல மொழிகளில் படங்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நடிகை ஊர்வசி சிறந்த முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாகப் படங்களில் நடித்து வந்த இவருக்கு, தமிழில் முதல் படமாக அமைந்தது முந்தானை முடிச்சு (Munthanai Mudichu). கடந்த 1983ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில், நடிகர் கே பாக்யராஜிக்கு (K. Bhagyaraj) ஜோடியாக நடித்திருந்தார்.  இந்த படத்தின் வரவேற்பிற்குப் பின் அடுத்தடுத்து தமிழில் பல படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது வரையிலும் இவர் சிறந்த கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பில் நடிகை ஊர்வசிக்கு, உள்ளொழுக்கு என்ற மலையாள படத்திற்காகச் சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் தேசிய திரைப்பட விருது குழுவிற்கு, நடிகை ஊர்வசி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் எந்த முறையில் தேசிய விருதுகள் கொடுக்கப்படுகிறது எனக் கேட்டுள்ளார். இது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க :தளபதி விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – சிவகார்த்திகேயன்!

தேசிய விருது பெற்றவர்களை வாழ்த்திய நடிகர் சூர்யாவின் பதிவு

தேசிய திரைப்பட விருதுகள் குழுவிற்கு கேள்வி எழுப்பிய ஊர்வசி

நடிகை ஊர்வசி , உள்ளொழுக்கு படத்திற்காக எனக்கும், பூக்காலம் திரைப்படத்திற்காக நடிகர் விஜயராகவனுக்கும் சிறந்த துணை நடிகர், நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் எங்கள் இருவருக்கும்  ஏன் சிறந்த நடிகருக்கான விருது அளிக்கப்படவில்லை ? பூக்காலம் திரைப்படத்தில், நடிகர் விஜயராகவன் காலையில் மேக்கப் போடுவதற்கு 5 மணிநேரம், அதை நீக்குவதற்கு 4 மணி நேரம் செலவிட வேண்டியிருந்தது. நீங்கள் எவ்வளவு கோடிகள் கொடுத்தாலும் வேண்டாம், என்னை விட்டுவிடுங்கள் என்று, அந்த படத்தின் போது நான் சொன்னேன். அதையெல்லாம் தியாகம் செய்து விஜயராகவன் நடித்தார்.

இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் எஸ்.எஸ்.ராஜமௌலி.. – ரஜினிகாந்த் அதிரடி!

அதற்கு ஒரு சிறப்பு விருது கொடுத்திருக்கலாமே. அவர் துணை நடிகராக ஆனது எதன் அடிப்படையில்  என்று  நான் கேட்கிறேன். என் கேள்வியில் நியாயம் இருக்கிறது. நாங்கள் பாடுபட்டுத்தான் நடிக்கிறோம், வரி செலுத்துகிறோம். அரசு தருவதைத்தான், பெற்றுக்கொள்ளவேண்டும் எனச் சொல்வது சரியில்லை. அரசு தரும் விருதை ஓய்வூதியமாக எடுத்துக்கொள்ள முடியாது” என நடிகை ஊர்வசி கூறியுள்ளார். தற்போது இது குறித்த தகவல்கள் மக்களிடையே வைரலாகி வருகிறது.