அறிவு இல்லாமல் கீழ்த்தரமான… தன் மீதான விமர்சனத்துக்கு திரிஷா அதிரடி பதில்

Trisha Breaks Silence: தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் என்னிடம் தெரிவித்தாவது, மைக் கிடைத்ததால் ஒருவர் பேசுவது புத்திசாலித்தனாகவும், நகைச்சுவையாகவும் மாறாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிவு இல்லாமல் கீழ்த்தரமான... தன் மீதான விமர்சனத்துக்கு திரிஷா அதிரடி பதில்

திரிஷா

Updated On: 

08 Mar 2026 22:17 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நாயகி வலம் வருகிறார் திரிஷா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார், சூர்யா, தனுஷ், சிம்பு என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபகாலமாக அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விமர்சனங்களுக்கு திரிஷா பதில்

தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் என்னிடம் தெரிவித்தாவது, அந்த நிகழ்ச்சியில் என் பெயரும் புகைப்படமும் கடைசி நேரத்தில் ஒருவரின் கோரிக்கையின் பேரில் அவரது உதவியாளர் மூலம் சேர்க்கப்பட்டதாக கூறினர். மைக் கிடைத்ததால் ஒருவர் பேசுவது புத்திசாலித்தனாகவும், நகைச்சுவையாகவும் மாறாது. அது வெறும் முட்டாள்தனத்தை அதிகமாகக் கேட்கச் செய்யும் ஒரு கருவியாக மட்டுமே இருக்கும். அதேபோல், அறிவு இல்லாமல் பயன்படுத்தப்படும் கீழ்த்தரமான வார்த்தைகள், அது யாரை பார்த்து கூறப்பட்டன என்பதைக் காட்டிலும், அதைச் சொன்னவரைப் பற்றியே அதிகமாக பேசுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க : Anirudh: நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்.. AA23 படத்திற்கு அனிருத்தின் சம்பளம் இத்தனை கோடியா?

திரிஷாவின் எக்ஸ் பதிவு

 

இந்த நிலையில் திரிஷா யார் அந்த நபர் என அவர் தனது பதிவில் குறிப்பிடவில்லை. இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் தங்கள் யூகங்களை வெளியிட்டு வருகின்றனர்.  சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநரும் நடிகருமான பார்த்திபனிடம், பொன்னியின் செல்வன் குந்தவை கெட்டப்பில் இருக்கும் திரிஷாவின் புகைப்படங்களைக் காட்டி, அவரைப் பற்றி கருத்து கேட்கப்பட்டது.

இதையும் படிக்க : Ken Karunaas: ஒரு படம் நல்ல இல்லனா அவங்க பரம்பரையையே திட்டுறாங்க.. கென் கருணாஸ் சொன்ன விஷயம்!

அப்போது பேசிய பார்த்திபன், இந்த குந்தவையை வீட்டிலேயே குந்த வைத்தால் நன்றாக இருக்கும் என்று பேசியது சர்ச்சையானது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது பார்த்திபனுக்கு பதிலளிக்கும் விதமாகவே அவர் பேசியதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அது தொடர்பான உறுதியான தகவல் இல்லை.

Follow Us
Related Stories
ஏப்ரலில் கருப்பு படத்தின் ரிலீஸ் இல்லையா? இணையத்தில் வைரலாகும் புது தேதி…
மீண்டும் தள்ளிப்போகும் ஜன நாயகன் சென்சார் விவகாரம்… ரிவைசிங் கமிட்டி பார்வை ஒத்திவைப்பு?
வார்த்தை ஜாலத்திற்காக மட்டுமே த்ரிஷா குறித்து அப்படி பேசினேன் – வருத்தம் தெரிவித்து ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்
Sivakarthikeyan: சேயோன் பட ஷூட்டிங் எப்போது? சிவகார்த்திகேயன் கொடுத்த அப்டேட்!
விஜய் டிவியில் சீரியலில் நடிக்க வந்த பிரபல சினிமா நடிகை.. அட இவரா? விஜய் டிவியில் சீரியலில் நடிக்க வந்த பிரபல சினிமா நடிகை.. அட இவரா?
Samuthirakani: யாரை பழிவாங்க இதை செய்கிறார்?.. இருந்ததும் போச்சி – விஜய்யை கடுமையாக சாடிய சமுத்திரக்கனி!
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு