AK 64 படத்தின் தயாரிப்பாளர் இவரா? அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

Ajith Kumars AK64 Movie Update: நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தினை தற்காலிகமாக AK64 என்று அழைத்து வருகின்றனர். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் தயாரிப்பாளர் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

AK 64 படத்தின் தயாரிப்பாளர் இவரா? அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

அஜித் குமார் 64

Published: 

09 Apr 2026 14:27 PM

 IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் AK 64. இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்க உள்ளதாக முன்பே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இவர் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டில் அதிக வசூலை செய்து அஜித் குமார் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தப் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர்களின் கூட்டணி அமைந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அஜித் குமார் தொடர்ந்து நடிப்பதில் மட்டும் இன்றி ரேசிங்கிலும் அதே அளவிற்கு கவனத்தை செலுத்தி வருகிறார்.

படங்களின் மூலமாக மட்டும் இன்றி ரேசிங் மூலமாக பல நாடுகளில் தொடர்ந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார் நடிகர் அஜித் குமார். இவரது ரேசிங் தொடர்பான செய்திகளும் வீடியோக்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் அஜித் குமார் நடிப்பில் உருவாக உள்ள AK 64 படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

AK 64 படத்தின் தயாரிப்பாளர் யார் தெரியுமா?

இந்தப் படத்தினை எந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் என்று பல மாதங்களாக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான ‘AK64’-ஐ ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தை அஜித்தே தயாரிக்கிறார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு அஜித் பந்தயப் போட்டிகள் மற்றும் திரைப்படப் படப்பிடிப்பு ஆகியவற்றில் மும்முரமாக ஈடுபடவுள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… என்னோட எல்.கே.ஜி படத்திற்கு ஓப்பனிங் சீன் பிரதீப் தான் எழுதுனது – ஆர்.ஜே.பாலாஜி

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ரீ ரிலீஸாகும் தளபதி விஜயின் சிவகாசி படம் – எப்போது தெரியுமா?

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?