தமிழ்ல விறுவிறுபான ஒரு வெப் சீரிஸ் பாக்கனுமா? அப்போ இந்த வதந்திய மிஸ் செய்யாதீர்கள்!

Vadhandhi Tamil Web Series: தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெறுவது போல ஓடிடியில் வெளியாகும் இணையதள தொடர்களும் ரசிகர்கலிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த தொடர் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

தமிழ்ல விறுவிறுபான ஒரு வெப் சீரிஸ் பாக்கனுமா? அப்போ இந்த வதந்திய மிஸ் செய்யாதீர்கள்!

வதந்தி

Published: 

15 Feb 2026 20:09 PM

 IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது போல ஓடிடியில் வெளியாகும் இணையதள தொடர்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் இணையதள தொடர்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அது தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடைஏ மாபெரும் வரவேர்பைப் பெற்ற இணையதள தொடர் வதாந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி. இந்த தொடரை இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கி இருந்தார். இது கடந்த டிசம்பர் மாதம் 2022-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்தத் தொடரில் எஸ்.ஜே. சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, வைபவ் முருகேசன், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ம்ருதி வெங்கட், அவினாஷ் ரகுதேவன், அஸ்வின் குமார், விக்கி ஆதித்யா, விதேஷ் ஆனந்த், சி.சுஜாதா, ஹரீஷ் பெராடி, குமரன் தங்கராஜன், அருவி பாலாஜி, மகேஷ் ஜி. குளப்புள்ளி லீலா, கவின் ஜெய் பாபு, அஸ்வின் ராம், ஆஷிக் ரஹ்மான், எம். மீரான் மிதீன், பிரணிகா தக்ஷு, மிருதுன் ஜெயன், சரண்யா ரவி ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்.

வதந்தி வெப் சீரிஸின் கதை என்ன:

இந்த கதையின் தொடக்கத்தில் ஒரு அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் இறந்த நிலையில் கிடைக்கின்றது. அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் கல்லூரியில் படிக்கும் வெனோலின் என்ற பெண்ணின் உடல் என்பதை காவல்துறையினர் கண்டுபிடிக்கின்றனர். அந்த கொலையில் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா நடித்து இருந்தார். தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க விசாரிக்க ஒவ்வொருவரும் மாறிமாறி கதைகளை கூறுகின்றனர்.

Also Read… ஏப்ரல் 30 வரை வாய்ப்பு இல்லை… ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வைரலாகும் முக்கிய தகவல்!

மேலும் அந்தப் பெண்ணின் நடத்தையை சிலர் தவறாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைப்பெற்று வந்த நிலையில் இறுதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றது. மொத்தம் 8 எபிசோடுகளைக் கொண்ட இந்த தொடரைப் பார்க்க நினைத்தால் நிறுத்தவே முடியாத அளவிற்கு ஒரே நேரத்தில் எட்டு எபிசோடுகளையும் பார்க்கும் அளவிற்கு விறுவிறுப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்