ரீ ரிலீஸாகும் விஜய் – சூர்யாவின் ஃப்ரண்ட்ஸ் படம்… உற்சாகத்தில் ரசிகர்கள்

Friends Movie: நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யா இருவரும் நெருங்கிய நண்பர்களாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஃப்ரண்ட்ஸ். இந்தப் படம் வெளியாகி 24 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் மீண்டும் இந்தப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ரீ ரிலீஸாகும் விஜய் - சூர்யாவின் ஃப்ரண்ட்ஸ் படம்... உற்சாகத்தில் ரசிகர்கள்

ஃப்ரண்ட்ஸ் படம்

Published: 

09 Sep 2025 15:19 PM

 IST

கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் ஃப்ரண்ட்ஸ். மலையாள சினிமாவில் 1999-ம் ஆண்டு வெளியான ஃப்ரண்ட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் தான் இது. இந்தப் படத்தை இயக்குநர் சித்திக் எழுதி இயக்கி இருந்தார். இவர் தான் மலையாளத்திலும் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் சூர்யா, தேவயானி, விஜயலட்சுமி,
ரமேஷ் கண்ணா, அபிநயஸ்ரீ, வடிவேலு, ஸ்ரீமன், சார்லி, ராதா ரவி, ராஜீவ், சரிதா, லக்ஷ்மி ரத்தன், பிரமிட் நடராஜன், சத்தியப்ரியா, எஸ்.என்.லட்சுமி, மதன் பாப், ராதா பாய், அஸ்வினி, ஏ.ஆர்.எஸ்., சாந்தி வில்லியம்ஸ், சந்தான பாரதி, கிரேன் மனோகர், கொட்டாச்சி, மாஸ்டர் வைஷ்ணவ் பாலச்சந்திரன், மாஸ்டர் ஜெயந்த், அனு கிருஷ்ணா,
கணேஷ் பாபு என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தை ஸ்வர்கசித்ர என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் அப்பச்சன் தயாரித்து இருந்தார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஃப்ரண்ட்ஸ் படத்தின் கதை என்ன?

நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் ரமேஷ் கண்ணா மூவரும் சின்ன வயதில் இருந்தே நெறுங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். சூர்யாவின் தம்பி சிறுவயதிலேயே இறந்துவிடுவார். இதனால் அவருக்கு எல்லாமே அவரது நண்பர்கள்தான். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் பெரியவனாகி காதல் சேட்டைகளை செய்துக்கொண்டு இருக்கிறார்.

இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவரை வெளியே அனுப்பிவைக்க சூர்யாவும் விஜயும் அவர்களின் நண்பரான ரமேஷ் கண்ணாவை பார்க்க வருகின்றனர். அங்கும் காதல் ஆசையில் சுற்றித்திரியும் விஜயை நடிகை தேவயானியை திருமணம் செய்துக்கொள்வார். இந்த சூழலில் சின்ன வயதில் நடிகர் சூர்யாவின் காதுகேட்டாமல் வாய் பேச முடியாமல் இருந்த தம்பி உயிரிழக்க விஜய்தான் கரணம் என்பதை தெரிந்தது சூர்யா விஜயை விட்டு பிரிந்து செல்கிறார்.

Also Read… அல்லூ அர்ஜுன் குறித்து நெகிழ்ந்து பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து – வைரலாகும் போஸ்ட்

இதனால் மணம் உடைந்த விஜய் ஒரு கட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு கோமாவிற்கு செல்கிறார். இறுதியில் விஜய் கோமாவில் இருந்து வெளியே வந்தாரா? பிரிந்த நண்பர்கள் மீண்டும் இணைந்தார்களா என்பது படத்தின் கதை. இந்தப் படத்தை தற்போது 4 கே வடிவில் மாற்றி மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அனஸ்வரா ராஜனின் பர்த்டே ஸ்பெஷல்… கேக் வெட்டி கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்