அன்புக்கு எல்லைகள் இல்லை என்பதை இந்த சம்பவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்கள் செல்ல நாய்க்காக எடுத்த இந்த முடிவு, பலரையும் கண் கலங்க வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு வேலை காரணமாக இடம்பெயர முடிவு செய்த இந்த தம்பதி, தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருந்த வளர்ப்பு நாயை தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.