வசூலில் சக்கைபோடு போடும் ரீ ரிலீஸான மங்காத்தா படம் – எத்தனை கோடிகள் தெரியுமா?
Re Released Mankatha Movie Collection: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மங்காத்தா படம் தற்போது ரீ ரிலீஸாகி வசூலில் சக்கைபோடு போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மங்காத்தா படம்
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே ரீ ரிலீஸ் என்ற கலாச்சாரம் அதிகரித்துள்ளது. அதன்படி முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் செய்துவருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் குமார் ஆகியோரின் படங்கள் தொடர்ந்து ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. அதன்படி முன்னதாக விஜய் மற்றும் ரஜினிகாந்தின் படங்கள் ரீ ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல தற்போது நடிகர் அஜித் குமார் நடிப்பில் முன்னதாக சூப்பர் ஹிட் அடித்த மங்காத்தா படமும் திரையரங்குகளில் ரீ ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர்கள் சிம்பு மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களும் தொடர்ந்து ரீ ரிலீஸாக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து முன்னணி நடிகர்களின் நடிப்பில் பல புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி நடிகர் அஜித் குமார் நடிப்பில் முன்னதாக சூப்பர் ஹிட் அடித்த மங்காத்தா படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் புதிதாக வெளியான படங்களைவிட அதிக அளவில் வசூலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வசூலில் சக்கைபோடு போடும் ரீ ரிலீஸான மங்காத்தா படம்:
அதன்படி நடிகர் அஜித் குமார் நடிப்பில் 50-வது படமாக உருவான மங்காத்தா படம் தற்போது ரீ ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வருகின்றது. அதன்படி கடந்த 23-ம் தேதி வெளியான மங்காத்தா படம் இதுவரை சுமார் ரூபாய் 16 கோடிகள் வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இதுகுறித்து படக்குழு எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… தடையை மீறிய பிக்பாஸ் அர்ச்சனா ரவிச்சந்திரன்… விசாரணையில் வனத்துறையினர்
மங்காத்தா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Kingmaker is ruling the screens♥️🥳 Join the #Mankatha celebration! 💥#Mankatha in theatres near you!♠️#AjithKumar @vp_offl @thisisysr @akarjunofficial @trishtrashers @actor_vaibhav @Premgiamaren @AshwinKakumanu @MahatOfficial @andrea_jeremiah @iamlakshmirai @yoursanjali… pic.twitter.com/evtL4VvE6V
— Sun Pictures (@sunpictures) January 27, 2026
Also Read… கிராஃபிக்ஸ் – அனிமேஷன் மீது ஆர்வம் வர அதுதான் காரணம்… சௌந்தர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்