அரசன் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எப்போது? அப்டேட் இதோ

Arasan Movie Shooting Update: நடிகர் சிலம்பரசன் தற்போது தனது 49-வது படமான அரசன் படத்தின் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முன்னதாக முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று அப்டேட் வெளியாகி உள்ளது.

அரசன் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எப்போது? அப்டேட் இதோ

அரசன்

Published: 

29 Jan 2026 10:09 AM

 IST

தமிழ் சினிமா ரசிகர்களிடையே குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நாயகன்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் சிலம்பரசன். இவர் கைக்குழந்தையாக இருக்கும் போதே தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார். தொடர்ந்து சினிமாவிலேயே தனது வாழ்க்கையை அற்பணித்த நடிகர் சிலம்பரசன் நாயகனாக மட்டும் இன்றி பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். அந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்து இருந்தார். படம் கலவையான விமர்சனத்தைப் பெற்று இருந்தாலும் நடிகர் சிலம்பரசனின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்த போது அவர் இயக்குநர் வெற்றிமாறன் உடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

முன்னதாக வெற்றிமாறன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் படத்தினை இயக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி வந்த நிலையில் அந்தப் படத்தின் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு அவர் நடிகர் சிலம்பரசன் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். இந்தப் படத்தையும் வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் தாணு தான் தயாரித்து வருகிறார். சிலம்பரசன் – வெற்றிமாறன் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியான போதே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அரசன் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எப்போது?

நடிகர் தனுஷின் ஆதர்சன இயக்குநர் சிம்பு உடன் கூட்டணி அறிவித்ததே எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில் படத்திற்கு அரசன் என்று பெயர் வைத்தது மேலும் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அரசன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து அரசன் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எப்போது நடைபெறும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அரசன் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் மத்தியில் நடைபெறும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… பராசக்தி படத்திலிருந்து வெளியானது ரத்னமாலா பாடலின் வீடியோ!

அரசன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகை தீபிகா படுகோன் என் அதிர்ஷ்ட தேவதை – இயக்குநர் அட்லி

ஷிம்லாவில் கடும் பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த ஹெரிடேஜ் டாய் டிரெயின்
பைக்கில் செல்வது தோனி - கோலியா? வைரலாகும் வீடியோ
அதிக அளவு தண்ணீர் குடிப்பது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்குமா?
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரத்தினக்கல் - அப்படி என்ன ஸ்பெஷல்?