ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் வோர்ல்ட் ஆஃப் பராசக்தி கண்காட்சி…!

World Of Parasakthi Extends: பராசக்தி படத்தை புரமோஷன் செய்யும் விதமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்காட்சி ஒன்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் தற்போது இந்த கண்காட்சியில் தேதி அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் வோர்ல்ட் ஆஃப் பராசக்தி கண்காட்சி...!

பராசக்தி

Published: 

22 Dec 2025 13:23 PM

 IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் பராசக்தி. இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை ஸ்ரீ லீலா நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடிக்க அதர்வா முரளி சிவகார்த்திகேயனின் தம்பியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராணா டகுபதி, பேசில் ஜோசஃப், குரு சோமசுந்தரம், பிரித்வி ராஜன், தேவ் ராம் நாத் என பலர் இந்தப் படத்தில் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.

படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியாகும் 100-வது படம் இது என்பது குறுப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் வோர்ல்ட் ஆஃப் பராசக்தி கண்காட்சி

இந்த நிலையில் இந்தப் படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. படத்தின் புரமோஷனுக்காக வோர்ல்ட் ஆஃப் பராசக்தி கண்காட்சியை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பு கிடைத்து வருவதால் வருகின்றட் 25-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வரை நீட்டித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read… Kiara Advani: யாஷின் டாக்சிக் படத்தில் இணைந்த கியாரா அத்வானி.. வெளியானது கேரக்டர் அறிமுக போஸ்டர்!

பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இளையராஜா – ஏ.ஆர். ரஹ்மானுக்கு அடுத்து ஜிவி. பிரகாஷ்தான்.. புகழ்ந்து தள்ளிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.!

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை