ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு இந்தியில் மஜதூர் என்று டைட்டில் வைத்துள்ளனர்… காரணம் என்ன?

Coolie Movie: நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் கோலிவுட் சினிமாவில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் கூலி. இந்தப் படம் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இந்தி தலைப்பு மட்டும் மாற்றப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு இந்தியில் மஜதூர் என்று டைட்டில் வைத்துள்ளனர்... காரணம் என்ன?

கூலி

Published: 

24 Jun 2025 15:20 PM

 IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி (Coolie Movie). இந்தப் படம் பான் இந்திய மொழிகளில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தமிழ் மற்றும் அதனுடன் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கூலி படம் அதே பெயரில் வெளியாக உள்ள நிலையில் இந்தியில் மற்றும் கூலி படத்தின் பெயரை மாற்றி மஜதூர் என்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இது குறித்து சமீபத்தில் செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில் படக்குழு இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. விரைவில் படக்குழு இதுகுறித்த விளக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கூலி படத்தை மஜதூர் என்று மாற்றக் காரணம் என்ன?

முன்னதாக இந்தியில் கடந்த 1983-ம் ஆண்டு இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் கூலி என்ற தலைப்பில் படம் ஹிந்தியில் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு நடிகர் வருண் தவான் நடிப்பில் இந்தி திரையுலகில் கூலி நம்பர் 1 எனும் தலைப்பில் படம் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே இந்தியில் கூலி படத்தின் பெயர் மாற்றப்படுவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.

விறுவிறுப்பாக நடைபெறும் ரஜினிகாந்தின் கூலி படத்தின் பணிகள்:

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் இறுதியாக வேட்டையன் படம் திரையரங்குகளில் வெளியான பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கத் தொடங்கினார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்ற நிலையில் படத்தின் ஷூட்டிங்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் முடித்துவிட்டார்.

இந்த நிலையில் படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்ற நிலையில் வருகின்ற ஜூன் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆம் ஆண்டு மாலை 6 மணிக்கு சிக்கிடு என்ற பாடலை  படக்குழு வெளியிட உள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கூலி படத்தின் சிங்கிள் வீடியோ குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Follow Us
Related Stories
Sivakarthikeyan: சூப்பர் ஸ்டாரை முதல் முறை பார்த்த தருணம்.. அவரை பார்க்கும்போது உறைந்து போய்ட்டேன் – சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்!
Janhvi Kapoor: எனது ஃபேஸ் க்ளோவிங்-காக இதை மறக்காமல் செய்வேன்.. ஜான்வி கபூர் சொன்ன பியூட்டி சீக்ரட்!
Ashwath Marimuthu: STR51-ல் சந்தானம் இருக்காரு.. படத்தின் மைய கருத்து இதுதான் – அஷ்வத் மாரிமுத்து கொடுத்த அப்டேட்!
Vadam: விமலின் கிராமத்து கதைக்களம் பெஸ்ட்டா? ஒஸ்ட்டா? வடம் திரைப்படத்தில் விமர்சனங்கள் இதோ!
Texla: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் டெக்ஸ்லா படத்தில் நடிக்கும் ஜெய்.. பூஜைகளுடன் தொடங்கிய ஷூட்டிங்!
Jana Nayagan: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தை பார்க்கும் மறு ஆய்வுக்குழு .. சென்சார் எப்போது கிடைக்கும்?
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி