சீதாவின் பார்வையில் ராமாயணத்தைச் சொல்லும் ‘தி கிராண்ட் சீதா சரிதம்’
Spiritual Spectacle in Mumbai : மும்பையில் நடந்த ‘தி கிராண்ட் சீதா சரிதம்’ நிகழ்ச்சி, சீதாவின் பார்வையில் ராமாயணத்தை கதையாக değil, ஆன்மீக அனுபவமாக சொல்லும் வகையில் ரசிகர்களை பரவசப்படுத்தியது. ஸ்ரீவித்யா வர்சஸ்வியின் இயக்கத்தில் 513 கலைஞர்கள் பங்கேற்ற இந்த 4D அரங்கேற்றம் நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு மிகச்சிறந்த காட்சி அனுபவமாக இருந்தது.

தி கிராண்ட் சீதா சரிதம்
நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் உள்ள தி கிராண்ட் தியேட்டரில் நடைபெற்ற தி கிராண்ட் சீதா சரிதம் என்ற ஆன்மீக கலைநிகழ்ச்சியில், சீதாவின் பார்வையில் ராமாயணத்தை சொல்லும் வகையில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. 4டி தொழில்நுட்பத்தில் அரங்கேறிய இந்த நேரடி கலைநிகழ்ச்சியில் 513 கலைஞர்கள், 30க்கும் மேற்பட்ட பாரம்பரிய மற்றும் நவீன கலை வடிவங்களை ஒரே மேடையில் வெளிப்படுத்தி காண்போரை பரவசத்துக்குள்ளாக்கினர். இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை அளித்தது. இந்த நிகழ்ச்சியில் பிரபல நடன இயக்குநர் ஸ்ரீவித்யா வர்சஸ்வி இயக்கினார். இது ராமாயணத்தின் கவித்துவம், ஆன்மிகமும் கொண்ட புதிய பார்வையில் வழங்கபப்பட்டது.
பாரம்பரிய நடனங்கள், நாட்டுப்புற கலைகள், பொம்மலாட்டம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஆகியவை கலந்த இந்த நிகழ்ச்சியில், சீதையின் காதல், தியாகம், புத்திசாலித்தனம், பிரார்த்தனை போன்ற உணர்வுகள் மிக அழகாக வெளிப்பட்டன.
இந்த நாடகத்தின் திரைக்கதை 20க்கும் மேற்பட்ட ராமாயண பதிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆன்மீக ஞானத்துடன் இணைந்து, ராமாயணத்தில் உள்ளடக்கிய அர்த்தத்தையும் உணர்த்தும் விதத்தில் உருவாக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மும்பையின் தராவியில் உள்ள ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேடையில் கலந்துகொண்டது ஹைலைட்டாக அமைந்தது. அவர்களது திறமையான நடிப்பு மற்றும் நம்பிக்கையுடன் கூடிய அரங்கேற்றம், கலை மற்றும் கல்வி சமூகங்களை எப்படி மாற்றக்கூடியதாக இருக்க முடியும் நமக்கு உணர்த்தியது.
பாலிவுட் நடிகர் விக்ராந்த் மெஸ்ஸி பாராட்டு
நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, அனுராதா பௌட்வால், அதா கான், தளிப் தாஹில், பங்கஜ் பெர்ரி உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் விக்ராந்த் மெஸ்ஸி, ஸ்ரீ வித்யா ஒரு நடிகையாகவும், இயக்குநராகவும் மிகச்சிறந்த வேலையை செய்துள்ளார். இது கண்களுக்கு விருந்தாக அமைந்தது என்றார். பிரபல நடிகை ஹினா கான், எனக்கு ஒட்டுமொத்த நிழக்ச்சியையும் பார்க்கும்போது எனக்கு புல்லரித்தது. குறிப்பாக குழந்தைகள் மிகச்சரியாக நடித்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சீதாவின் பார்வையில் ராமாயணம்
முன்னதாக டெல்லியில் நடந்த உலக கலாச்சார திருவிழாவில் 4600 கலைஞர்களுடன் “தி கோஸ்மிக் ரிதம்” போன்ற பெரும் நிகழ்ச்சிகளை நடத்திய ஸ்ரீவித்யா, “சீதாவின் வாழ்க்கையின் பல தருணங்களை உணர்ந்து அதை இன்று ரசிகர்கள் நன்கு புரிந்துகொள்ளக்கூடிய வடிவமாக கொண்டு வருவது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது என்றார்.
இந்நிகழ்ச்சி 13,27 கிராமப்புற மற்றும் பழங்குடி மாணவர்கள் மற்றும் ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ இலவச பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் நிதி திரட்டும் முயற்சியிலும் முக்கிய பங்கு வகித்தது. இந்நிகழ்ச்சி இந்தியாவின் பிற நகரங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் வருங்காலத்தில் அரங்கேற உள்ளது. சீதாவின் கதையின் ஊடாக ஆன்மீகமும் ஞானமும் நிரம்பிய இந்த கலைநிகழ்ச்சி, மனித மனங்களில் நிச்சயமாக இடம்பிடிக்கும்.