இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூர்யா 46 படம்… ரிலீஸ் எப்போது தெரியுமா?
Actor Suriya 46 Movie Update: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி தற்போது இவரது நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் உருவாகி வருகின்றது. இது குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Suriya 46
கோலிவுட் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு பெரிய பட்ஜெட்டில் வெளியாக கங்குவா தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து வெற்றியைக் கொடுக்க வேண்டிய சூழலில் சூர்யா இருந்த நிலையில் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது ரெட்ரோ படம். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவெற்பைப் பெற்றது. இந்த வெற்றி சூர்யாவிற்கு மட்டும் இன்றி அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் கருப்பு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் இணைந்து கூட்டணி வைத்தார். சூர்யா 46 என்று தற்காலிகமாக இந்தப் படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூர்யா 46 படம்:
இந்த நிலையில் சூர்யாவின் 46-வது படத்தின் பணிகள் கடந்த மே மாதமே தொடங்கிய நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் அடுத்த 2026-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Ajith Kumar: நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன்.. தனது ரசிகர்கள் குறித்து அஜித் குமார் நெகிழ்ச்சி!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
The final stages of shooting for #SURIYA46 are currently underway in Hyderabad.#Suriya | #Suriya47 pic.twitter.com/PBY6KUoQhn
— Movie Tamil (@_MovieTamil) December 13, 2025
Also Read… Anirudh: ரஜினியின் 75வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடிய அனிருத்.. வைரலாகும் வீடியோ!