கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்… வைரலாகும் போஸ்ட்
Ken Karunas Movie Name: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது நடிகராக வலம் வரும் கென் கருணாஸ் தானே எழுதி இயக்கி நாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் இன்று வெளியாகி உள்ளது.

கென் கருணாஸ்
தமிழ் சினிமாவில் நடிகர் பாலாவின் இயக்கத்தில் வெளியான நந்தா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனாவர் நடிகர் கருணாஸ். இந்தப் படத்தில் நடிகர் கருணாஸ் லொடுக்குப் பாண்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு ரசிகர்கள் அவரை லொடுக்குப் பாண்டி என்றே அடையாளப்படுத்தி வந்தனர். தொடர்ந்து சின்ன சின்ன வேடத்தில் நடித்து வந்த நடிகர் கருணாஸ் முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களின் நண்பர்களாகவும் காமெடி நடிகராகவும் நடித்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் குத்துப் பாடல்களைப் பாடி பிரபலமான பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் நடிகர் கருணாஸ். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இதில் ஆண் பிள்ளையான கென் கருணாஸ் தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ரகளபுரம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை, அழகுக் குட்டி செல்லம் ஆகியப் படங்களில் நடித்து வந்த கென் கருணாஸ் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான அசுரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் இரண்டு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்.
கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்:
இந்த நிலையில் நடிகர் கென் கருணாஸ் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நாயகனாக அறிமுகம் ஆகும் படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படம் குறித்த தகவல் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்த நிலையில் தற்போது படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு யூத் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… நோ சிலம்பரசன்… நோ ரஜினிகாந்த்… இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்து இவரதான் இயக்கப் போறாரா?
கென் கருணாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Youth
“Before life actually got serious “Unveiling the first look from my lead debut and directorial debut #Youth #KeninYouth 🎬
Having grown up in awe of #ThalapathyVijay sir’s screen presence, embarking on my cinematic journey with the timeless title Youth feels both… pic.twitter.com/Uw3sbYe0t1
— Ken Karunaas (@KenKarunaas) January 14, 2026
Also Read… ஆக்ஷன் காமெடியில் வெளியான இந்த நானிஸ் கேங் லீடர் படத்தை பார்த்து இருக்கீங்களா?