தனுஷின் 54 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியானது சூப்பர் அப்டேட்

Dhanush 54 Movie Name: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது அவரது 54-வது படம். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் அப்டேட் குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

தனுஷின் 54 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியானது சூப்பர் அப்டேட்

கர

Published: 

15 Jan 2026 11:36 AM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவரது 54-வது படத்திற்காக இயக்குநர் விக்னேஷ் ராஜா உடன் இணைந்தார். இந்தக் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியான போதே ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதற்கு காரணம் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் முன்னதாக வெளியான போர் தொழில் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றதுதான். இது இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்குநராக அறிமுகம் ஆன படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியான பிறகு படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஸ்னல் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இந்த நிலையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தின் போஸ்டர் மற்றும் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் 54-வது படத்திற்கு கர என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது:

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்திற்கு கர என்று பெயர் வைத்துள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. மேலும் படம் வருகின்ற கோடை விடுமுறை முன்னிட்டு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.

Also Read… மீண்டும் பிக்பாஸில் நுழைந்த சாண்ட்ரா… வந்ததுமே தொடங்கிய சர்ச்சை… வைரலாகும் வீடியோ

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கார்த்தி – நலன் குமாரசாமி காம்போ வெற்றிப் பெற்றதா? வா வாத்தியார் படத்தின் விமர்சனம் இதோ!

ஜப்பானில் முடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?
வாகன ஓட்டியை தாக்கிய போக்குவரத்து காவலர் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபர்.... 50 சதவிகித வாய்ப்பு - துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்
திருடப்பட்ட செல்போனை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்த இளம்பெண்