டாக்ஸிக் படத்தில் நடிகை நயன்தாராவின் கதாப்பாதிரம் இதுதான் – படக்குழு வெளியிட்ட அறிவிப்பு
Nayanthara's character in Toxic Film: கன்னட மொழியில் நடிகர் யாஷின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் டாக்ஸிக். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் அறிமுகப் போஸ்டர் தற்போது தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வரும் நிலையில் அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. 2005-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன நடிகை நயன்தாரா தற்போது 20 ஆண்டுகளைக் கடந்தும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இறுதியாக நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான படம் டெஸ்ட். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. தொடர்ந்து இந்தப் படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழியகளில் அடுத்தடுத்தப் படங்களில்ல் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
அதன்படி இவர் தமிழில் மூக்குத்தி அம்மன் 2, தெலுங்கு சினிமாவில் மன சங்கர வர பிரசாத் காரு, மலையாள சினிமாவில் டியர் ஃப்ரண்ட், கன்னட சினிமாவில் டாக்ஸிக் என தொடர்ந்து நடிகை நயன்தாரா பலப் படங்களில் இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் அவரது கதாப்பாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டாக்ஸிக் படத்தில் நடிகை நயன்தாராவின் கதாப்பாதிரம் இதுதான்:
நடிகர் யாஷ் நாயகனாக நடித்து கன்னட சினிமாவில் உருவாகி வரும் படம் டாக்ஸிக். இந்தப் படம் பீரியட் கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் நிலையில் படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் வருகின்ற மார்ச் மாதம் 19-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.
இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் கதாப்பாத்திர அறிமுகப் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நட்டிகை நயன்தாராவின் கதாப்பாத்திர பெயர் கங்கா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்? வைரலாகும் தகவல்
டாக்ஸிக் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Introducing Nayanthara as GANGA in – A Toxic Fairy Tale For Grown-Ups #TOXIC #TOXIConMarch19th #TOXICTheMovie @thenameisyash #Nayanthara @advani_kiara @humasqureshi #GeetuMohandas @RaviBasrur #RajeevRavi #UjwalKulkarni #TPAbid #MohanBKere #SandeepSadashiva… pic.twitter.com/k3JotNTvXj
— KVN Productions (@KvnProductions) December 31, 2025
Also Read… இன்று மாலை வெளியாகிறது மூக்குத்தி அம்மன் 2 படத்தின் கிளிம்ஸ் வீடியோ