2 வருட கோபம்… 2 வருட புரட்சி… திரையரங்குகளில் வெளியாகி 2 ஆண்டுகளைக் கடந்தது கேப்டன் மில்லர் படம்
2 Years of Captain Miller: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் கேப்டன் மில்லர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

கேப்டன் மில்லர்
தமிழ் சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்தார். ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் அட்வெஞ்சர் படமாக உருவாகி இருந்த இந்த கேப்டன் மில்லர் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் சிவ ராஜ்குமார்,
சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், அதிதி பாலன், எட்வர்ட் சோனென்ப்ளிக், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், வினோத் கிஷன், இளங்கோ குமரவேல், ஜெயபிரகாஷ், அலெக்ஸ் ஓ’நெல், விஜி சந்திரசேகர், காளி வெங்கட், போஸ் வெங்கட், பிந்து பாண்டு, மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி, அஸ்வின் குமார், அப்துல் லீ, மார்க் பென்னிங்டன், அருணோதயன்,டேவிட் மைக்கேல் ஹாரிசன், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், சுயம் சித்தா, அசுரன் கிருஷ்ணன், ஆசான் பி.செல்வராஜ் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து இருந்த நிலையில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் படத்திற்குஇசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
2 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர்:
சுதந்திரத்திற்கு முன்னதாக மன்னர்களின் ஆட்சியின் கீழ் வாழும் மக்களாக தனுஷி குடும்பம் உள்ளது. தாழ்த்தப்பட்ட ஜாதி என்று அவர்கள் ஒடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரிட்டிஷ் ஆர்மியில் சேர்ந்தால் மரியாதை கிடைக்கும் என்று நினைக்கிறார் தனுஷ். மன்னர்களை விட ஆங்கிலேயர்களின் ஆட்சி கொடுமையானது என்று அதனை எதிர்க்கும் நபரகா தனுஷின் அண்ணன் சிவ ராஜ்குமார் போராடி வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் இவர்களின் இருவரின் ஆட்சியிலுமே தங்களுக்கு மரியாதை கிடைக்காது என்பதை உணர்ந்த தனுஷ் இறுதியில் தனது போராட்டத்தில் வெற்றிப் பெற்றார என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
Also Read… பொங்கல் ரிலீஸில் வரிசைக்கட்டும் புதுப் படங்கள்… லிஸ்ட் இதோ
கேப்டன் மில்லர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
2 Years of rage. 🔥
2 Years of revolution. ⚔️#CaptainMiller 💥 Two years on… the fire still burns 🔥#2YearsOfCaptainMiller @dhanushkraja @gvprakash @ArunMatheswaran @NimmaShivanna @priyankaamohan @sundeepkishan #SathyaJyothiFilms pic.twitter.com/iEF22e9eVg— Sathya Jyothi Films (@SathyaJyothi) January 12, 2026
Also Read… Vaa Vaathiyaar: மீண்டும் மீண்டுமா? வா வாத்தியார் படத்தின் ரிலீஸிற்கு வந்த புது பிரச்சனை?