பைசன் படத்தை யார் எல்லாம் தியேட்டரில் பார்க்கலாம்? சென்சார் போர்ட் கொடுத்த சர்டிஃபிகேட்!
Bison Kaalamaadan Movie : நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பைசன் காலமாடன். இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள நிலையில் படம் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பைசன்
இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj) தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகும் படங்களில் சமூகம் சார்ந்த பிரச்னைகள் வெளிப்படையாக பேசுவதன் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அதன்படி இயக்குநர் மாரி செல்வராக் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான வாழை படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இயக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வரவேற்பைப் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரமை வைத்து இயக்குநர் மாரி செல்வராஜ் படத்தை இயக்கி வருகிறார்.
அதன்படி இந்தப் படத்திற்கு பைசன் காலமாடன் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை அனுபமா பரமேசுவரன் நடிகர் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் பசுபதி, லால் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் தான் எனது முதல் படம் என்று நடிகர் துருவ் விக்ரம் பேசியது இணையத்தில் சர்ச்சையை கிளப்பியது. சிலர் அவருக்கு எதிராகவும் பலர் அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். ஆனால் அவர் கடந்த 2022-ம் ஆண்டே முதல் இரண்டு படங்களும் அவரது படம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதன்படி முதல் படம் ரீமேக்காகவும் இரண்டாவது படம் அவரது தந்தை விக்ரமுடனும் நடித்து இருந்தார். அதனால் தான் அவருக்கு பைசன் படம் முதல் படம் என்று கூறியுள்ளார். அது சரிதான் என்று ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பைசன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார்போர்ட்:
அதன்படி படம் வருகின்ற அக்டோபர் மாதம் 17-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி படத்திற்கு தற்போது தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… கார்த்தியின் வா வாத்தியார் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு
இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Kaalamaadan is limitless and he is set to meet everyone on Oct17th!! 💥
Censored U/A!! ✨✨✨#BisonKaalamaadan 🦬💥 9 more days to go!! #BisonKaalamaadanFromDiwali #BisonKaalamaadanOnOct17 🎆@applausesocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal @beemji @Tisaditi… pic.twitter.com/wiP5tFQXpi
— Mari Selvaraj (@mari_selvaraj) October 8, 2025
Also Read… சிவகார்த்திகேயனின் படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு – வைரலாகும் வீடியோ