விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்… ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட புது அப்டேட்
Jana Nayagan Movie Audio Launch Update: தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாக உள்ளது.

ஜன நாயகன்
நடிகர் தளபதி விஜய் (Thalapathy Vijay) நடிப்பில் 69-வது படமாக உருவாகி வருகின்றது ஜன நாயகன் படம். கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜயின் நடிப்பில் இறுதியாக வெளியாக உள்ள படம் இது என்பதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிகர் விஜயின் ஜோடியாக நடித்துள்ளார். இவர் முன்னதாக நடிகர் விஜய் உடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார். அந்தப் படத்திலேயே இந்த ஜோடியைக் கொண்டாடிய ரசிகர்கள் மீண்டும் இந்த ஜோடி ஜன நாயகன் படத்தில் இணைந்ததை தற்போது கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே உடன் இணைந்து நடிகர்கள் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன், ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெஸி, பாபா பாஸ்கர், டீஜே அருணாசலம், நிழல்கள் ரவி, ரேவதி, ஸ்ரீநாத், இர்பான் ஜைனி, அருண் குமார் ராஜன் என பலர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஒரு பாடலில் கேமியோ எண்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.
இன்று மாலை வெளியாகிறது ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்:
பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன் இந்த ஜன நாயகன் படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகின்றது. படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து முன்னதாக தளபதி கச்சேரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில் இன்று மாலை படக்குழு ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Selamat datang 😁
Watch this space at 5:30 PM today ✌🏻#Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries #JanaNayagan#JanaNayaganPongal #JanaNayaganFromJan9 pic.twitter.com/j8SyLZY8xi
— KVN Productions (@KvnProductions) November 21, 2025