Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vijay : கொடைக்கானலில் ‘ஜன நாயகன்’ ஷூட்டிங் ஓவர்.. ரசிகர்களின் அன்புடன் சென்னை திரும்பிய விஜய்!

Kodaikanal Jana Nayagan Shooting Wraped :தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய். இவரின் நடிப்பில் இறுதி திரைப்படமாக மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருவது ஜன நாயகன். இந்த படத்தின் ஷூட்டிங் சமீப காலமாகக் கொடைக்கானலில் நடந்து வந்த நிலையில், அங்குப் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு நடிகர் தளபதி விஜய் மீண்டும் சென்னைக்குத் திரும்பியுள்ளார்.

Vijay : கொடைக்கானலில் ‘ஜன நாயகன்’ ஷூட்டிங் ஓவர்.. ரசிகர்களின் அன்புடன் சென்னை திரும்பிய விஜய்!
தளபதி விஜய் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 05 May 2025 18:39 PM

தமிழகத்தில் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான  தளபதி விஜய் (Thalapathy Vijay) நடிப்பில் இறுதியாக வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் தி கோட் (The GOAT). இந்த படத்தைப் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு  (Venkat Prabhu) இயக்கியிருந்தார். இந்த படமானது எதிர்பார்த்ததைவிட அதிகம் வசூல் செய்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்தட்டுவரும் இறுதி படம் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படைத்தை அஜித்தின் துணிவு படத்தை இயக்கிய ஹச். வினோத் (H.Vinoth) இயக்கி வருகிறார். இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சமீபகாலமாக திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் (Kodaikanal) மலைப் பகுதிகளில் நடந்து வந்தது.

இந்நிலையில் ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நிறைவடைந்த நிலையில், நடிகர் விஜய் மீண்டும் சென்னையை நோக்கிச் சென்றுள்ளார். இன்று 2025, மே 5ம் தேதியில் நடிகர் விஜய், மதுரை விமானநிலையத்தில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டுள்ளார். செல்லும் வழியில் நடிகர் விஜய்க்கு மக்கள் தங்களின் அன்பின் வெளிப்பாடாக பல்வேறு பரிசுகளைக் கொடுத்துள்ளனர். நடிகர் விஜய்க்கு மாலையை அணிவித்து மீனாட்சி அம்மனின் போட்டோவை பரிசாகக் கொடுத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் விஜய் கொடைக்கானலில் நடந்துவந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு, மதுரையில் விமான நிலையத்தில் மக்களையும், கட்சி தொண்டர்களையும் சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து   விமானத்தின் மூலமாகச் சென்னைக்குப் புறப்பட்டார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யின் இந்த 69வது திரைப்படத்தை இயக்குநர் ஹச். வினோத் இயக்கி வருகிறார். இவரின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷ்ன் நிறுவனமானது தயாரித்து வருகிறது. சுமார் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் நடிப்பதற்கு மட்டும் தளபதி விஜய் ரூ. 275 கோடியைச் சம்பளமாகப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்த வருகிறார். இவர் இந்த படத்தில் விஜய்யுடன் இரண்டாவது முறையாக ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமா நிலையில்,முற்றிலும் அரசியல் சார்ந்த கதைக்களத்துடன் இந்த திரைப்படமானது உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யுடன், ஸ்ருதி ஹாசன், பூஜா ஹெக்டே, வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், பாபி தியோல், மமிதா பைஜூ, மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்தது வருகின்றனர். மேலும் இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!
எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!...
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!...
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்...
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!...
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!...
இரத்த சர்க்கரை அளவை குறைக்க 7 சிறந்த உடற்பயிற்சிகள் !
இரத்த சர்க்கரை அளவை குறைக்க 7 சிறந்த உடற்பயிற்சிகள் !...
சுட்டெரிக்கும் வெயில்.. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 5 உணவு!
சுட்டெரிக்கும் வெயில்.. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 5 உணவு!...
மே 5 ஆம் தேதியை "வர்த்தகர்கள் நாள்" ஆக அறிவித்தார் முதல்வர்
மே 5 ஆம் தேதியை
ஒற்றைத் தலைவலியின் ஆரம்ப அறிகுறிகள்... தடுக்க என்ன செய்ய வேண்டும்
ஒற்றைத் தலைவலியின் ஆரம்ப அறிகுறிகள்... தடுக்க என்ன செய்ய வேண்டும்...
ரோலக்ஸ் ரோலில் நடிப்பதற்குக் காரணம் அந்த வெறிதான்- சூர்யா!
ரோலக்ஸ் ரோலில் நடிப்பதற்குக் காரணம் அந்த வெறிதான்- சூர்யா!...
பஹல்காம் தாக்குதல் சம்பவம் - மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு
பஹல்காம் தாக்குதல் சம்பவம் - மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு...