நிலவையே கொடுப்பதாக சொன்னாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகமட்டேன் – பிரபல நடிகை ஓபன் டாக்
Bigg Boss: வெள்ளித்திரையில் பிரபல நடிகர்களின் படங்களுக்கு வரவேற்பு எப்படி கிடைக்குமோ அதே போல சின்னத்திரையில் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அதிகம் விரும்பும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி குறித்து பிரபல நடிகை ஒருவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ்
இந்திய சினிமாவில் பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சிக்கு முன்னோடி இந்தி சினிமா தான். இந்தியாவில் முதன் முதலாக இந்தி சினிமாவில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி இந்தி சினிமாவில் தொடங்கப்பட்ட இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களிடையே மாபெரும் வரவெற்பைப் பெற்று வருகிறது. தற்போது 2025-ம் ஆண்டு பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியின் 19-வது சீசன் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரபலங்கள் பலர் தொடர்ந்து ஆர்வம் காட்டி ஆடிஷனில் கலந்துகொள்வது வழக்கமாக உள்ளது. அதே நேரத்தில் சினிமாவில் அல்லது சமூக வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் நபர்களை பிக் பாஸ் நிகழ்ச்சி குழு நேரடியாக தொடர்பு கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவும் வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.
பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியின் வாய்ப்பை வேண்டாம் என்று கூறிய பிரபல நடிகை:
அந்த வகையில் இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக உள்ள தனுஸ்ரீ தத்தாவை இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வைக்க நிகழ்ச்சி குழு தொடர்பு கொண்டதை குறித்து நடிகை பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். அதன்படி பாலிவுட் திகானா என்ற செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நடிகை தனுஸ்ரீ தத்தா அப்படிப்பட்ட இடத்தில் என்னால் தங்க முடியாது. ஏன் என்றால் என்னால் என் சொந்த குடும்பத்தினருடனே தங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு ஒருபோதும் ஆர்வம் இருந்தது இல்லை. இனியும் அதில் கலந்துகொள்ள ஆர்வம் காட்ட மாட்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க நிகழ்ச்சிக் குழு எனக்கு ரூபாய் 1.65 கோடி வழங்கவும் தயாராக இருந்தனர். அவர்கள் எனக்கு நிலாவைக் கொடுத்தாலும் நான் அந்த நிகழ்ச்சிக்கு போகமாட்டேன் என்றும் நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… நடிகர் ஜெய் நடிக்காமல் தவறவிட்ட 3 சூப்பர் ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா? அவரே சொன்ன விசயம்