2025ல் விவாகரத்து அறிவித்த தமிழ் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ!

Tamil Celebrities Divorced In 2025 : தமிழ் சினிமாவில் பல நட்சத்திர நடிகர்கள் இருந்துவருகின்றன. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் தங்களின் விவாகரத்து குறித்து அறிவித்த பிரபலங்கள் பலர் இருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் யார் யார் என்பது குறித்து விவரத்தை முழுமையாக காணலாம்.

2025ல் விவாகரத்து அறிவித்த தமிழ் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ!

சைந்தவி - ஜிவி பிரகாஷ், சாய்ரா பானு- ஏ.ஆர்.ரஹ்மான்

Published: 

12 Dec 2025 22:30 PM

 IST

ஜி.வி.பிரகாஷ் குமார் – சைந்தவி : தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV.Prakash Kumar). இவர் மற்றும் பாடகி சைந்தவி (Sindhavi) இருவரும் தங்களின் பள்ளி பருவம் முதலே காதலித்து வந்தனர். இவர்களின் காதல் கடந்த 2013ம் ஆண்டில் திருமணத்தில் முடிந்தது. திருமணத்திற்கு பின்னும் சந்தோசமாக தங்களின் வாழ்க்கையை தொடங்கிய இவர்களுக்கு, கடந்த 2020ம் ஆண்டில் அன்வி(Anvi) என்ற அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது. இவர்கள் இருவரும் தனது குழந்தையுடன் வாழ்க்கையை சிறப்பாக நடத்திவந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டின் இறுதியில் இருவரும் விவாகரத்து (Divorce) பெறுவதாக அறிவித்திருந்தனர். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் ஏன் இவர்கள் விவகாரத்து செய்கின்றனர் என ரசிகர்கள் கருத்துக்களை வெளிப்படுத்திவந்தனர்.

அந்த வகையில் இவர்களின் விவாகரத்து வழக்கு கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கும் மேல் நடந்த நிலையில் இந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். ஆனாலும் இவர்கள் இருவரும் பல இசை கச்சேரியில் இணைந்து பணியாற்றிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2025ல் எதிர்பார்த்த வெற்றியை பெற்று அதிகம் வசூல் செய்த படங்கள் என்னென்ன தெரியுமா? லிஸ்ட் இதோ!

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு :

பான் இந்திய இசையமைப்பாளர்கள் ஒருவராக இருந்துவருபவர் ஏ.ஆர். ரஹ்மான் (AR. Rahman). இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு (Saira banu rahman) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி கிட்டத்தட்ட 3 குழந்தைகள் இருக்கிறது. இவர்கள் திருமண வாழ்வு கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் நீடித்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் விவாகரத்து பெறுவதாக ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்திருந்தார்.

பின் இவர்கள் இருவரும் தங்களின் தனிப்பட்ட பிரச்னை என்பதால், இந்த விவாகரத்து தொடர்பான விஷயத்தை மறைமுகமாகவே கொண்டு செல்கின்றனர். இன்னும் இவர்கள் இருவரும் விவாகரத்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி :

நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் ஒருவர். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி (Aarthi Ravi)) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது இரு மகன்கள் இருக்கின்றனர். மேலும் குடும்ப பிரச்சனையின் காரணமாக ஆர்த்தி ரவியை விவகாரத்து செய்யத்தக்க ரவி மோகன் அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க: 2025-ம் ஆண்டில் இயல்பான நடிப்பால் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படங்களின் லிஸ்ட் இதோ!

கராத்தே பாபு படம் குறித்து ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

மேலும் இவர் இதை தொடர்ந்து ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர்களின் விவகாரத்து வழக்கு இன்னும் நடைபெற்றுவரும் நிலையில், ஆர்த்தி ரவி இணைந்து வாழவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார். மேலும் ரவி மோகன் தற்போது பிரபல பாடகி கெனிஷாவை காதலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

100 ஆண்டுகள் பழமையான வேப்ப மரத்தை வெட்டாமல், அதனை சுற்றி வீடு கட்டிய குடும்பம்
மிருகக் காட்சியில் நடந்த ஷாக் சம்பவம்.. உணவுக்காக ஊழியரை தாக்கிய கரடி..
மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்கலாம்; 100 பேருக்கு மட்டுமே வாய்ப்பு
பிரபஞ்சத்தில் இருந்து வந்த சிக்னல்களா?  நாசா விளக்கம்