Karuppu : கருப்பு வருது பாருங்கடா.. சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

Karuppu Movie First Look : தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா. இவரின் 45வது திரைப்படமாக ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் கருப்பு. இந்நிலையில் நாளை 2025, ஜூலை 23ம் தேதி சூர்யாவின் 50வது பிறந்தநாள் என்ற நிலையில், கருப்பு படத்திலிருந்து முதல் பார்வையைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த முதல் பார்வையானது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

Karuppu : கருப்பு வருது பாருங்கடா.. சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

சூர்யாவின் கருப்பு திரைப்படம்

Published: 

22 Jul 2025 20:05 PM

கோலிவுட் இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் கருப்பு (Karuppu). இந்த படத்தில் உச்ச நடிகர் சூர்யா (Suriya) முன்னணி நாயகனாக நடித்துள்ளார். இவரின் 45வது திரைப்படமாக இந்த கருப்பு திரைப்படம் உருவாகிவருகிறது. இந்த படமானது ஆரம்பத்தில் சூர்யா45 என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து 2025, நவம்பர் மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியிருந்த நிலையில், பரபரப்பாக நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து தற்போது இப்படமானது இறுதிக்கட்ட வேலையிலிருந்து வருகிறது.

இந்நிலையில், நாளை 2025, ஜூலை 23ம் தேதியில் சூர்யாவின் 50வது பிறந்தநாள் (Suriya’s 50th Birthday). இந்நிலையில் பர்த்டே ட்ரீட்டாக படக்குழு இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் ரிலீஸ் நேரத்தையும் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் டீசர் 2025, ஜூலை 23ம் தேதியில் காலை 10 மணி அளவில் வெளியாகவுள்ளது. இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? குஷியில் ரசிகர்கள்!

சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் முதல் பார்வை பதிவு :

முதல் பார்வையில் சூர்யாவின் லுக் :

இந்த கருப்பு படத்தின் முதல் பார்வையில், நடிகர் சூர்யா கருப்பு வேஷ்டி மற்றும் சட்டையுடன் காட்சியளிக்கிறார். மேலும் இதில் சூர்யா, வாயில் சுருட்டை புகைத்தபடியே திமிரான லுக்கில் இந்த போஸ்டரில் காணப்படுகிறார். இந்த போஸ்டரானது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்கப்பட்டு வருகிறது. இப்படமானது முற்றிலும் கிராமம் மற்றும் குற்றம் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகியிருப்பதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க : ரஜினிகாந்த்தின் கூலி.. 3வது பாடலான ‘Power House’ வெளியீடு!

கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :

நடிகர் சூர்யாவின் இந்த கருப்பு திரைப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருக்கும் நிலையில், இறுதிக்கட்ட வேலைகளிலிருந்து வருகிறது. இந்த படத்திற்காக இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் இப்படமானது உருவாகிவரும் நிலையில், இப்படத்தின் பாடல்கள் குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படமானது வரும் 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். டிரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் உருவாகியிருக்கும், இப்படத்தின் டீசர் நாளை 2025, ஜூலை 23ம் தேதியில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீஸருடன் இப்படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.