உறியடி புகழ் விஜயகுமாரின் புதுப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா
Suriya releases the first look poster actor Vijaya Kumar movie: தமிழ் சினிமாவில் உறியடி என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜயக்குமார். இவரது நடிப்பில் தற்போது உருவாக உள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

அறிவு படம்
தமிழ் சினிமாவில் கடந்த மே மாதம் 27-ம் தேதி 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் உறியடி. இந்தப் படத்தை எழுதி, இயக்கி நாயகனாக நடித்து படத்தை தயாரித்து இசையமைக்கவும் செய்தார் விஜயக்குமார். இந்தப் படத்தின் மூலமாகதான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உறியடி படம் பொலிட்டிகல் த்ரில்லர் பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைப் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது. மேலும் உறியடி படத்தின் மூலம் பிரபலமான விஜயக்குமார் அதனைத் தொடர்ந்து உறியடி 2 படத்தையும் எழுதி இயக்கி நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படமும் முதல் பாகத்தைப் போல ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து விஜயக்குமார் படங்களை இயக்கவில்லை என்றாலும் நாயகனாக நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி விஜயக்குமார் நாயகனாக நடித்தப் படங்களான ஃபைட் கிளம் மற்றும் எலெக்ஷன் ஆகியப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இவரது நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு எலெக்ஷன் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்து தற்போது அப்டேட் வெளியாகி உள்ளது.
விஜயகுமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா:
அதன்படி நடிகர் விஜயகுமார் தற்போது நாயகனாக நடித்து வரும் படம் அறிவு. இந்தப் படத்தை இயக்குநர் சத்யசிவா எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜயக்குமார் உடன் இணைந்து நடிகை ஆனந்தி நடித்து வருகிறார். இந்தப் படத்தை மூவிட்ரான் இந்தியா என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் அறிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் சூர்யா கூறியதாவது, மகளிர் தினத்தன்று, உண்மையான நோக்கத்துடனும் இதயத்துடனும் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை வெளியிடுகிறோம். இது ஒரு முக்கியமான கதை என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும் என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… சென்னையில் உள்ள வீட்டுற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார் – நீதிமன்றத்தில் சங்கீதா மனு!
நடிகர் சூர்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
On Women’s Day, unveiling a film made with real intention and heart. I can tell you it’s a story that matters. First look here 👇 #Arivu #WomensDay #Cinema@Vijay_B_Kumar @anandhiactress @Sathyasivadir @immancomposer @movietronindia @j_saivinoth pic.twitter.com/Lk4lyOgYgI
— Suriya Sivakumar (@Suriya_offl) March 8, 2026
Also Read… அல்லு அர்ஜுன் தம்பி திருமணத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் போட்டோ