Suriya: தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்.. நண்பர் விஜய்க்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள் – சூர்யா பதிவு!
Suriya Congratulates Thalapathy Vijay: கோலிவுட் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவர் தவெக தலைவர் விஜய்யின் நண்பரும் கூட, இன்று நடந்த 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவில் விஜய் முன்னிலை வகிக்கும் நிலையில், அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை சூர்யா பகிர்ந்துள்ளார்.

தளபதி விஜயை வாழ்த்திய சூர்யா
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் சூர்யா (Suriya). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவர் சினிமாவில் நடிகராக அறிமுகமான திரைப்படம் “நேருக்கு நேர்” (1997) (Nerukku Ner). இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் (Thalapathy Vijay) இணைந்து நடித்திருந்தார். தனது முதல் படத்திலே தளபதி விஜயுடன் இணைந்து நடித்து பிரபலமாகியிருந்தார். அங்கிருந்தே விஜய் மற்றும் சூர்யாவின் நட்பும் வளர்ந்தது என்றே கூறலாம். இதுவரை இரு படங்களில் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை கடந்தும் சினிமாவில் இவர்கள் இருவரின் நட்பும் சிறப்பாகவே இருக்கிறது. அந்த வகையில் நடிகரும், தவெக கட்சி (TVK Party) தலைவருமான விஜய், நடந்துமுடிந்த 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் (Assembly elections 2026) அதிக வாக்குகள் அடிப்படியில் முன்னிலை வகிக்கிறார்.
அந்த வகையில் தவெக கட்சி தலைவர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்து பல்வேறு பான் இந்திய நடிகர்களும் பதிவுகளை வெளியிட்டுவருகின்றனர். அந்த வகையில் அவரின் நெருங்கிய நண்பரான நடிகர் சூர்யாவும், தளபதி விஜயை வாழ்த்தி எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றியடைந்த தளபதி விஜய்!
தவெக தலைவரும், தனது நண்பருமான விஜயை வாழ்த்து சூர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு :
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
— Suriya Sivakumar (@Suriya_offl) May 4, 2026
இந்த பதிவில் நடிகர் சூர்யா, “மக்களின் அன்பும், ஆதரவும் கிடைப்பது வர என்றும், நண்பர் விஜய் மீது தமிழ்நாடு மிகப்பெரிய நம்பிக்கையை கொண்டுள்ளது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்” என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தற்போது இந்த பதிவானது சூர்யா ரசிகர்கள் மற்றும் விஜய்யின் ரசிகர்கள் மத்தியிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: சவுத் குயின் திரிஷாவுக்கு பர்த்டே.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட கருப்பு படக்குழு!
நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்க்கு தெலுங்கு, இந்தி மலையாளம் போன்ற பல்வேறு சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். தெலுங்கில் மகேஷ் பாபு, நாக வம்சி, விஜய் தேவரகொண்டா, நானி போன்ற பலவேறு பிரபலங்களும் வாழ்த்து பதிவை வெளியிட்டிருந்தனர். மேலும் இந்தியில் நடிகை காஜல் அகர்வால், ஜாக்கி ஷெராப் போன்ற பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.