அந்த விதத்தில் கார்த்தியை பார்த்து எனக்கு கொஞ்சம் பொறாமை – சூர்யா சொன்ன விஷயம்!
Suriya About Karthi: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், நடிகரும், அவரின் சகோதரர் கார்த்தியை பார்த்து பொறாமைப்படும் விஷயம் குறித்த வெளிப்படையாக பேசியுள்ளார்.

கார்த்தி மற்றும் சூர்யா
நடிகர் சூர்யா (Suriya) தென்னிந்திய மக்களிடையே மிகவும் பிரபலமான கதாநாயகனாக சினிமாவில் கலக்கிவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை 44 திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. இவரும் சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட 28 வருடங்களை கடந்த நிலையில், தற்போதுவரையிலும் முன்னணி கதாநாயகனாகவே திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் கிட்டத்தட்ட பல கோடிகளுக்கு மேல் வசூலித்து ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ரெட்ரோ (Retro) என்ற படமானது சுமார் ரூ 230 கோடிகளுக்கு மேல் வசூலித்து ஹிட் கொடுத்திருந்தது. இந்நிலையில் இவரின் நடிப்பிலும் தொடர்ந்து படங்கள் தயாராகிவருகிறது. நடிகர் சூர்யா ஏற்கனவே 2டி என்டேர்டைமென்ட் (2D Entertainment) என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்து நடத்திவரும் நிலையில், தற்போது புதியதாக ழகரம் (Zhagaram) என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ்தான் சூர்யா47 (Suriya47) என்ற படமானது தற்போது தயாராகிவருகிறது. இந்நிலையில் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூர்யா, அதில் அவரின் சகோதரரும், நடிகருமான கார்த்தி (Karthi) குறித்து பொறாமைப்படும் விஷயம் பற்றி பேசியிருந்தார்.
இதையும் படிங்க: விஜய் சார் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது – நடிகை பூஜா ஹெக்டே
கார்த்தி குறித்து மனம் திறந்த சூர்யா :
அந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, அதில் “அவ்வப்போது கார்த்தியை பார்த்தாலே, எனக்கு பொறாமையாக இருக்கும். அவர் எப்போதும் விமானத்தில் செல்வார், அவரின் கம்பியூட்டரில் முன் சினிமா தொடர்பான புத்தகங்கள் எப்போதுமே இருக்கும். எனக்கு அதை பார்க்கும்போது கொஞ்சம் கூச்சமாக இருக்கும். மேலும் நானும் அவ்வப்போது கார்த்தியிடம் கேட்பேன் அப்படி இந்த புத்தகத்தில் என்னதான் படிக்கிற, எனக்கும் கொஞ்சம் சொல்லு என அவரிடம் கேட்பேன்.
இதையும் படிங்க: இதற்கு முன்னே எந்த படத்திலும் அதுபோன்று நடிக்கவில்லை.. டாக்சிக் படம் குறித்து பேசிய ருக்மிணி வசந்த்!
எனக்கு அந்த 500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை படிக்கும் அளவிற்கு பொறுமை சுத்தமாக கிடையாது. மேலும் அவரை படத்தை எல்லாம் கூறும்போது எனக்கும் அது கொஞ்சம் ஈசியாக புரியும். மேலும் அப்பப்போ கார்த்தியிடம் பேசுவதன் மூலமாக பல விஷயங்களை நானும் தெரிந்துகொள்வேன்” என அந்த நிகழ்ச்சியில் சூர்யா வெளிப்படையாக பேசியிருந்தார்.
சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த கார்த்தியின் இன்ஸ்டாகிராம் பதிவு :
நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மும்மொழி படங்கள் தயாராகிவருகிறது. அதில் கருப்பு மற்றும் சூர்யா46 போன்ற திரைப்படங்கள் இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது, மேலும் மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தயாராகிவரும் சூர்யா47 படத்தின் ஷூட்டிங் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் வரும் 2026ம் ஆண்டும் மற்றும் 2027ம் ஆண்டில் தொடர்ந்து வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.