Karuppu: சிம்பு – அசல் கோளாறு குரலில்.. வெளியானது கருப்பு பட ‘நாங்க நாலு பேரு’ வீடியோ பாடல்!

Naanga Naalu Peru Lyric Video: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் 45வது திரைப்படமாக வெளியாக காத்திருப்பதுதான் கருப்பு திரைப்படம். தற்போது இப்படத்திலிருந்து, நாங்க நாலு பேரு என்ற இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Karuppu: சிம்பு - அசல் கோளாறு குரலில்.. வெளியானது கருப்பு பட நாங்க நாலு பேரு வீடியோ பாடல்!

நாங்க நாலு பேரு பாடல்

Updated On: 

23 Mar 2026 20:37 PM

 IST

நடிகர் சூர்யா (Suriya) மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ balaji) கூட்டணியில் தயாராகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம்தான் “கருப்பு” (Karuppu). ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களை போலவே இந்த படத்திலும் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் அதிரடியாக தயாராகியுள்ளதாம். அவருக்கு ஜோடியாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டின் இறுதியிலே தொடங்கிய நிலையில், 2025ம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைந்திருந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி, திரிஷா, மன்சூர் அலிகான், ஷிவதா, ஸ்வாசிகா (Swasika) போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது தெய்வீகம், நீதி போன்ற கதையில் தயாராகியுள்ளதாம்.

இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார். இவரின் இசையில் “God Mode” என்ற முதல் பாடல் சிறப்பாக வரவேற்கப்பட்டு நிலையில், தற்போது இரண்டாவது பாடலான “நாங்க நாலு பேரு” ( Naanga Naalu Peru) வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் சிலம்பரசன், ராப் பாடகர் அசல் கோளாறு இணைந்து பாடியுள்ளனர். தற்போது இது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: கர பட தனுஷின் கதாபாத்திர அறிமுகம் எப்போது? படக்குழு கொடுத்த அப்டேட்!

கருப்பு படத்தின் 2வது பாடல் குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த கருப்பு திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி வெறும் இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் நடித்துள்ளார். இதில் அவர் “பேபி கண்ணன்” “தி டெவில் அட்வகேட்” என்ற வேடத்தில் நடித்துள்ளாராம். காட் மோட் என்ற முதல் பாடல் சூர்யாவின் ஆக்ஷன் பாடலாக வெளியாகியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாடல் நாங்க நாலு பேரு, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஸ்வாசிகாவின் பாடலாக அமைந்துள்ளது. இதில் ஆர்.ஜே.பாலாஜி, நடிகை ஸ்வாசிகா, சாய் அபயங்கர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பிரபலங்கள் காணப்படுகின்றனர்.

இதையும் படிங்க:  நான் கருப்பு படத்தை பான் இந்திய படமாக இயக்க நினைக்கல – ஆர்.ஜே.பாலாஜி சொன்ன விஷயம்!

இதிலிருந்தே தெரிகிறது, கருப்பு திரைப்படத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வில்லனாக நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த வகையில் தற்போது திருவிழாவை போல, தினமும் கருப்பு படத்திலிருந்து அப்டேட் வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது ரெட்ரோ படத்திற்கு பின் சூர்யாவிற்கு வெற்றியை கொடுக்கும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..