ரீ ரிலீஸாகும் சூப்பர் ஹிட் ஜோடி சூர்யா – ஜோதிகாவின் காக்க காக்க படம்

Kaakha Kaakha Movie Re Release Update: தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் அடித்த படங்களை தற்போது ரீ ரிலீஸ் செய்து வரும் நிலையில் அடுத்ததாக நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற காக்க காக்க படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரீ ரிலீஸாகும் சூப்பர் ஹிட் ஜோடி சூர்யா - ஜோதிகாவின் காக்க காக்க படம்

காக்க காக்க

Published: 

29 Jan 2026 11:17 AM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் ஒன்றாக நடிக்கும் பலர் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள்தான் நடிகர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து ரசிகர்களின் ஆதர்சன நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். மேலும் கணவன் மனைவியாக இவர்களின் வாழ்க்கை குறித்து பேட்டிகளில் பேசுவதும் ரசிகர்களிடையே தொடர்ந்துவ் அரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து பலப் படங்களில் நடித்துள்ளனர். அதில் ஒன்றுதான் காக்க காக்க. கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது இந்த காக்க காக்க படம். இந்தப் படத்தினை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருந்தார்.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஜோதிகா நாயகியாக நடித்து இருந்தார். நிஜ வாழ்க்கையில் ஜோடியாக இருக்கும் இவர்கள் திரையில் ஜோடியாக நடித்து இருந்தது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்தப் படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரீ ரிலீஸாகும் சூர்யா – ஜோதிகாவின் காக்க காக்க படம்:

பிரபல தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு இந்த காக்க காக்க படத்தை தயாரித்து இருந்தார். சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து ரீ ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது சூர்யா ஜோதிகா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த காக்க காக்க படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… நான் ஹீரோவா நடிக்க முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் – இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

இந்த செய்தி ரசிகர்களிடையே தற்போது வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்த காக்க காக்க படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 22 வருடங்களை கடந்து 23-வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. விரைவில் இந்தப் படத்தின் ரீ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… தடையை மீறிய பிக்பாஸ் அர்ச்சனா ரவிச்சந்திரன்… விசாரணையில் வனத்துறையினர்

கோவாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை பாம்பு.. இதன் தன்மை என்ன?
‘ஜனநாயகன்’ படம் வெளியாவதில் சிக்கல் நீடிப்பு
விஷ்ணு மோகனுடன் இணையும் மோகன்லால்.. குழு விவரம் இதோ..
ஷிம்லாவில் கடும் பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த ஹெரிடேஜ் டாய் டிரெயின்