அஞ்சல பாடலுக்கு கௌதம் மேனனுடன் டான்ஸ் ஆடிய நடிகர் சூர்யா – வைரலாகும் வீடியோ

Suriya and GVM Dance Video: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் சினிமாவில் அறிமுகம் ஆகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக விழா ஒன்று நடத்தப்பட்டது. அதில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

அஞ்சல பாடலுக்கு கௌதம் மேனனுடன் டான்ஸ் ஆடிய நடிகர் சூர்யா - வைரலாகும் வீடியோ

சூர்யா மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன்

Published: 

02 Feb 2026 10:34 AM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் திரையரங்குகளில் வெளியான படம் மின்னலே. இந்த மின்னலே படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் மாதவன் நாயகனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கினார். அதன்படி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், வெந்து தணிந்தது காடு என தொடர்ந்து படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தொடர்ந்து தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். இவர் மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிகராக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து சினிமாவில் ரசிகர்கள் இயக்குநராக அவரை ஏற்றுக்கொண்டது போல நடிகராகவும் வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகம் ஆகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நேற்று 1-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு விழா ஒன்று நடைப்பெற்றது. அதில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனை சிறப்பு செய்தனர்.

கௌதம் மேனனுடன் டான்ஸ் ஆடிய நடிகர் சூர்யா:

இந்த நிலையில் இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்து வாரணம் ஆயிரம் படத்தில் வெளியான அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல பாடலிற்கு மேடையில் நடனம் ஆடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதனைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Also Read… தலைவர் 173 படத்தை என்னால் முடிக்க முடியுமா என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது – இயக்குநர் சிபி சக்ரவர்த்தி ஓபன் டாக்

இணையத்தில் வைரலாகும் சூர்யா- கௌதம் மேனன் டான்ஸ் வீடியோ:

Also Read… அன்பறிவ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் படத்தின் சூப்பர் அப்டேட் இதோ!

ரூ.15 லட்சம் செலவுசெய்து வளரப்பு நாயை ஆஸ்திரேலியா கொண்டு சென்ற இந்திய தம்பதி
அசாமில் 80 மீட்டர் பாலத்தை உருவாக்கிய அசாம் இளைஞர்
மரணத்திற்குப் பின்னும் வாழ்க்கை உண்டா? மரணத்தை வெல்ல நிபுணர்கள் முயற்சி
உருவாகிறது ரஜினிகாந்தின் பயோபிக்.. இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா?.. வந்தது குட்நியூஸ்!!