Jana Nayagan: பொங்கலன்று உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகன் பட விசாரணை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Jana Nayagan Censor Issue: தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் தளபதி விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக உருவாகியுள்ள படம் தான் ஜன நாயகன். இப்படம் சென்சார் பிரச்னையின் காரணமாக வெளியாகாமல் இருக்கும் நிலையில், இப்படத்தின் உச்ச நீதிமன்ற வழக்கு வரும் 2026 ஜனவரி 15ம் தேதியில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஜன நாயகன் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் (H. Vinoth) இயக்க, கே.வி.என். ப்ரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளர். மேலும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகர்கள் மமிதா பைஜூ (Mamitha Baiju), பாபி தியோல், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என கூறப்படும் நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் வெளியாகவிருந்தது.
இப்படத்திற்கு சென்சார் பிரச்சனையின் காரணமாக வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) படக்குழுவினர் கடந்த 2025 ஜனவரி 5ம் தேதியில் வழக்கு தொடர்ந்தனர். இப்படத்தின் வழக்கு பின் இறுதியாக 2026 ஜனவரியில் 9 ஆம் தேதியில் விசாரிக்கப்பட்ட நிலையில், இறுதி தீர்ப்பை உயர் நீதிமன்றம் 2026 ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில் இப்படக்குழு உச்ச நீதிமன்றத்தை (Supreme Court) அணுகி உடனடியாக விசாரிக்கவிடும் என படக்குழு வழக்கு தொடர்ந்த நிலையில், சென்சார் குழுவும் கேவியட் வழக்கு தொடந்துள்ளது. இதன்படி இந்த வழக்கு எப்போது விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2026 ஜனவரி 15ம் தேதி வியாழக்கிழமை விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியதுள்ளது.
இதையும் படிங்க: தமிழ் ஆடியன்ஸ்க்கு ஜன நாயகன் ஒரு புது படம் – பகவந்த் கேசரி பட இயக்குநர் அனில் ரவிபுடி பேச்சு!
ஜன நாயகன் படத்தின் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை :
#JanaNayagan Latest update: Jan 15th hearing at Supreme Court. pic.twitter.com/UE7Syu7sbl
— Movie Tamil (@_MovieTamil) January 13, 2026
பொங்கல் பண்டிகையில் ஜன நாயகன் படம் வெளியாவதில் சிக்கல் :
தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் இருந்துவந்தது. இந்நிலையில் இந்த படத்தின் சென்சாருக்காக படக்குழு கடந்த 2025 டிசம்பர் 18ம் தேதியில் விண்ணப்பித்த நிலையில், படத்தைப் பார்த்த தணிக்கைத்துறையினர் அதற்கு யு/ஏ சான்றிதழை பரிந்துரைத்துள்ளனர். மேலும் இதையடுத்து தணிக்கைக்குழுவில் உள்ள ஒருவர் அதை எதிர்த்த நிலையில், இந்த படத்திற்கு ரிவியூ கமிட்டிக்கு அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் சென்சார் சான்றிதழ் கிடைக்க அதிக காலமாகும் நிலையில், படக்குழு இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கிட்டத்தட்ட 3 நாட்களுக்கும் மேல் நடந்த நிலையில், இறுதி தீர்ப்பை வரும் 2026 ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து.
இதையும் படிங்க: வா வாத்தியார் பட ரிலீஸை முன்னிட்டு ‘எம்.ஜி.ஆர்’ நினைவிடத்திற்கு சென்ற படக்குழு!
இதனை தொடர்ந்து படக்குழு மேல்முறையீட்டிருக்கு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இதன் வழக்கு 2026 ஜனவரி 12ம் தேதியில் படக்குழு வழக்கு பதிவு செய்த நிலையில், இதனை எதிர்த்து சென்சார் குழு தங்களின் வாதங்களை முதலில் கேட்கவேண்டும் என கேவியட் வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கு உடனடியாக விசாரிக்கப்படும் என நினைத்த நிலையில், 2026 ஜனவரி 19ம் தேதிக்கு விசாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஜன நாயகன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.