Sudha Kongara: ஜனநாயகனுக்கு நடந்தது எந்தப் படத்துக்கும் நடக்கக் கூடாது – சுதா கொங்கரா பேச்சு!
Sudha Kongara About Jana Nayagan Movie: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக பிரம்மாண்ட படங்களை கொடுத்துவருபவர் சுதா கொங்கரா. இவரின் இயக்கத்தில் சமீபத்தில் பராசக்தி படமானது வெளியாகியிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்த இவர், தளபதி விஜய்யின் ஜன நாயகன் படம் குறித்து பேசியுள்ளார்.

விஜய் மற்றும் சுதா கொங்கரா
இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) பிரபல இயக்குநரான மணிரத்னத்தின் (Mani Ratnam) உதவி இயக்குநராக சினிமாவில் ஆரம்பத்தில் பணியாற்றிவந்தார். பின் கடந்த 2010ம் ஆண்டில் வெளியான துரோகி (Drohi) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து இறுதிச் சுற்று, சூரைப் போற்று மற்றும் பராசக்தி (Parasakthi) போன்ற படங்ககளை இயக்கியள்ளார். அந்த வகையில் இறுதியாக இவரின் இயக்கத்தில் வெளியான படம் பராசக்தி. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் (Ravi Mohan), அதர்வா மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடித்திருந்தனர். இந்தி மொழி எதிர்ப்பு தொடர்பான கதையில் உருவான இப்படம், கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியா டுடே என்ற ஆங்கில பத்திரிக்கை பேட்டி ஒன்றில் சுதா கொங்கரா கலந்துகொண்டிருந்தார். அதில் அவர், ஜன நாயகன் (Jana nayagan) படத்தின் சென்சார் பிரச்சனை குறித்து மன வருத்தத்துடன் பேசியுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகப் பேசப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: மீண்டும் வந்த விஜய் குமார் ஐ.பி.எஸ்… கவனம் பெரும் ‘தெறி’ பட ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்!
ஜன நாயகன் திரைப்படம் குறித்து வருத்தப்பட்டுப் பேசிய சுதா கொங்கரா :
அந்த பேட்டியில் பேசிய சுதா கொங்கரா, “எனக்கு விஜய் ரொம்பவே பிடிக்கும், நான் அவரின் மிகப்பெரிய பெரிய ரசிகை . அதை நான் பலமுறை கூறியிருக்கிறேன். மேலும் எங்களை சுற்றியும் பல விஷயங்கள் நடந்தது, ஜன நாயகன் படத்தின் ஆடியோ லான்ச் மிக பிரம்மாண்டமாக நடந்தது, அந்த படமும் எங்கள் படத்துடன் வெளியாகவிருந்தது. மேலும் நானும் பல இடத்தில் சொல்லியிருக்கிறேன், எனது படங்களை நான் 2000ம் முறை பார்ப்பேன். ஆனால் ஜனநாயகன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நிச்சயம் பார்ப்பேன் என கூறியிருந்தேன்.
இதையும் படிங்க: எனக்கு ஆதரவு கொடுக்க திரண்ட ரசிகர்கள்.. ஒருநாள் அவர்களை பெருமைப்படுத்துவேன் – அஜித் குமார் பேச்சு!
அந்த படத்தின் நிலை ரொம்பவே கடுமையாக இருக்கிறது. ஜன நாயகன் படத்திற்கு என்ன நடந்தது, வெறும் 2 நாட்கள் ரிலீசிற்கு முன்னே சென்சார் போர்ட் பிரச்சனை அதை ரிலீஸ் செய்யவிடாமல் தடுத்துவிட்டது. இந்த படத்தின் நிலை எந்த திரைப்படங்களுக்கும் வந்துவிடக்கூடாது. விஜய் நாட்டின் பெரிய நாயகன், அவருடன் நீங்கள் போட்டியிட முடியாது. அந்த படமும் , எங்களின் படமும் வெளியாக ஒரு பண்டிகை தேதி வேண்டியிருந்தது அவ்வளவுதான்” என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.
ஜன நாயகன் திரைப்படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பேசிய வீடியோ பதிவு :
“I love Vijay.. I’m probably his biggest fan.. I have told him the same.. What happened with #JanaNayagan should not happen to any film.. Vijay is the biggest star in the country, You can’t compete with him..”
– #SudhaKongara in a Recent Interview ⭐ pic.twitter.com/4TCZ2THaYQ
— Laxmi Kanth (@iammoviebuff007) January 18, 2026