மறுஆய்வு குழுவினர் கேள்விக்கு சுதா கொங்கரா அளித்த பதில் – இணையத்தில் வைரலாகும் வீடியோ
Director Sudha Kongara: தமிழ் சினிமாவில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் படம் பராசக்தி. இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கோரியபோது என்ன எல்லாம் நடந்தது என்பது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் சுதா கொங்கரா. தமிழ் சினிமாவில் இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது. இந்த பராசக்தி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஸ்ரீ லீலா நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன் மற்றும் அதர்வா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இருந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு பாடல்களை இசையமைத்து இருந்தார். அந்தப் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் வசூலிலும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மறுஆய்வு குழுவினர் கேள்விக்கு சுதா கொங்கரா அளித்த பதில்:
மதிப்பாய்வுக் குழுவினர் ‘பராசக்தி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, நான் பார்வையாளர்களைத் தூண்டிவிடுகிறேனா என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘துரந்தர்’ மற்றும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்ற படங்கள் எடுக்கப்பட்டும், அவை பார்வையாளர்களைத் தூண்டிவிடவில்லை என்று பதிலளித்தேன். எதிர்காலத்தில் இதுபோன்ற இனப்படுகொலைகள் நடக்காமல் இருப்பதற்காகவே நான் ‘பராசக்தி’ படத்தை எடுத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இணையத்தில் கவனம் பெறும் சுதா கொங்கரா பேச்சு:
“Revising committee watched #Parasakthi & asked if I’m triggering the audience. I replied #Dhurandhar & #TheKashmirFiles has been taken & didn’t triggered the audience. I have taken Parasakthi, so that no genocide will happen in the future”
– #SudhaKongarapic.twitter.com/O5D9wWmXa6— AmuthaBharathi (@CinemaWithAB) January 14, 2026
Also Read… பொங்கல் ரிலீஸிலிருந்து அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட மூன்று திரைப்படங்கள்? என்னென்ன தெரியுமா?