டூரிஸிட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்
நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றப் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் (Sasikumar) நாயகனாகவும் நடிகை சிம்ரன் (Simran) நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து கமலேஷ், மிதுன் ஜெய் சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், யோகி பாபு என பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கொரோனா காலத்தில் ஏற்படும் பொருளாதார சிக்கல் காரணமாக சசிகுமாரின் குடும்பம் இலங்கையை விட்டு தமிழகத்திற்கு வர முடிவு செய்கின்றனர். கடல் வழியாக இலங்கையில் இருந்து சசிகுமார் தனது மனைவி சிம்ரன் மற்றும் மகன்கள் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷ் ஆகியோருடன் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு வருகிறார்கள்.
அங்கு இருந்து சசிகுமார் தனது மச்சான் யோகி பாபுவின் உதவியுடன் சென்னையில் குடும்பத்துடன் செட்டில் ஆகின்றனர். அங்கு உள்ள அனைவரிடம் அன்பாக பழகி அந்த ஏரியாவிற்கே பிடித்த குடும்பமாக அவரக்ள் மாறுகின்றனர். காதல், செண்டிமெண்ட், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு ஃபீல் குட் படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி.
படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
BIGGEST BLOCKBUSTER #TouristFamily steps into Successful 4th WEEK in theatres near you 🥳🥁
The WHOLESOME FAMILY ENTERTAINER strikes huge at the Box Office ❤️
Written & directed by @abishanjeevinth ✨
A @RSeanRoldan musical 🎶@sasikumardir @SimranbaggaOffc @Foxy_here03… pic.twitter.com/PhZVTWBj2g— Million Dollar Studios (@MillionOffl) May 23, 2025
பிரபலங்களும் ரசிகர்களும் கொண்டாடும் டூரிஸ்ட் ஃபேமிலி;
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்தே ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் பிரபல இயக்குநர் ராஜமௌலி என பலரும் இந்தப் படத்தைப் பாராட்டித் தள்ளினர். இவர்கள் மட்டும் இன்றி பலரும் பாராட்டுகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் ட்வீட்:
#TouristFamily OTT 🍿
Most likely on June 6 on HOTSTAR💥 pic.twitter.com/93bWQ2UHqy
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 22, 2025
ஓடிடியில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி:
திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. படம் திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிடும் வழக்கம் தமிழ் சினிமாவில் இருப்பதால் இந்தப் படத்தை வருகின்ற ஜூன் மாதம் 6-ம் தேதி 2025-ம் ஆண்டு ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.