சிவகார்த்திகேயன் இல்லை… வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்க உள்ளது இவரையா? வைரலாகும் தகவல்

Director Venkat Prabhu Next Movie With Pradeep Ranganadhan: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக இவர் எந்த நடிகரை வைத்து படம் இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சிவகார்த்திகேயன் இல்லை... வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்க உள்ளது இவரையா? வைரலாகும் தகவல்

வெங்கட் பிரபு

Published: 

20 Apr 2026 18:22 PM

 IST

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பண்முகத் தன்மை கொண்டவராக வலம் வருகிறார் கங்கை அமரன். இவரது மூத்த மகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் தான் வெங்கட் பிரபு. இவர் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் நடிகராவும் நாயகனாகவும் நடித்து வந்தார். நாயகனாக நடித்தப் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இயக்குநர் என்ற அவதாரத்தை எடுத்தார் வெங்கட் பிரபு. அதன்படி சென்னை 28 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் அஜித் குமார், கார்த்தி மற்றும் தளபதி விஜய் என இவர் முன்னணி நடிகர்கள் வைத்தும் படங்களை இயக்கி உள்ளார். இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்க உள்ளது இவரையா?

வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றவிருந்த தனது அடுத்த திரைப்படத்தை தற்போது நிறுத்தி வைத்துள்ளார். அதற்கு மாற்றாக, பிரதீப் ரங்கநாதனுடன் தனது அடுத்த படத்தை உருவாக்க அவர் திட்டமிட்டு வருகிறார். வெங்கட் பிரபு நாளை பிரதீப் ரங்கநாதனிடம் தனது படத்தின் கதையை விவரிக்க உள்ளார். இது, சிவகார்த்திகேயனுடன் அவர் பணியாற்ற ஒப்புக்கொண்டிருந்த அதே அறிவியல் புனைகதைத் திரைப்படம்தானா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. கதை விவரிப்பு உள்ளிட்ட அனைத்தும் சுமுகமாக அமைந்தால், எதிர்காலத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் கூட்டணி அமைவது உறுதியாகிவிடும்.

Also Read… Raaka: அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தின் கேமியோ வேடத்தில் பாலிவுட் நடிகர்? அட இவர்தான்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… மீண்டும் கூட்டணி அமைக்கும் ஜெய் பீம் படக்குழு… சூர்யாவின் அடுத்தப் பட அப்டேட் இதோ!

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..