தலைவர் 173 படம் எப்படி இருக்கும்? சினிமா வட்டாரத்தில் பரவும் தகவல்
Thalaivar 173 Movie Update: தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள தலைவர் 173 படம் குறித்து அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரஜினிகாந்த் மற்றும் சிபி சக்ரவர்த்தி
உலக அளவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்கள் உருவாகி வெளியாகி வருகின்றது. அதன்படி வருடத்திற்கு ஒரு முறையாவது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் படம் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியா திரையரங்குகளில் வெளியான படம் கூலி. கடந்த 2025-ம் ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி வருகிறார்.
முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல இரண்டாவது பாகமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
ரஜினிகாந்தின் தலைவர் 173 படம் இப்படிதான் இருக்குமா?
இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தலைவர் 173 படத்தினை முன்னதாக சுந்தர் சி இயக்குவதாக தெரிவிக்கப்பட்டு உடனே அவர் படத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யார் இந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தினை இயக்கிய இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் இந்தப் படம் எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி தலைவர்173 – பொங்கல் 2027-க்கு ஒரு முழுமையான வணிக ரீதியான திருவிழா விருந்து தயாராகிறது. இது 90-களின் பாணியில், அதே சமயம் சமமான வணிக அம்சங்களையும், அதே அளவு வலுவான குடும்ப நாடகத்தையும் கொண்ட ஒரு தலைவர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் ஒன்லைன் கதை, ‘தி அவுட்ஃபிட்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்திலிருந்து ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் படம், ஒரு தையல் கடையை நடத்தும் கதாநாயகனைச் சுற்றி வருகிறது, அவருடைய வாடிக்கையாளர்களில் கொடூரமான குண்டர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… ‘ஜனநாயகன்’ சென்சார் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.. படம் எப்போது ரிலீஸாகும்?
இணையதில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Thalaivar173 – A AGMARK COMMERCIAL FESTIVAL ENTERTAINER 🎉 loading for Pongal 2027. It is said to be a nostalgic 90s-styled #Thalaivar film with equal commercial mass elements 🔥 and an equally strong family drama ♥️✨.
Buzz is that the one-line is said to be inspired by the… pic.twitter.com/fvjaaZcnwS
— Movies Singapore (@MoviesSingapore) January 27, 2026