நோ தீபாவளி… நோ பொங்கல்… கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? – வைரலாகும் புது தகவல்

Karuppu Movie : நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாகும் படம் கருப்பு என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்கள் எதுவும் வெளியாகாமல் இருப்பதால் தற்போது படக்குழு மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

நோ தீபாவளி... நோ பொங்கல்... கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? - வைரலாகும் புது தகவல்

கருப்பு

Updated On: 

14 Sep 2025 11:41 AM

 IST

நடிகர் சூர்யாவின் (Actor Suriya) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ரெட்ரோ. ரெட்ரோ ஸ்டைலில் நடிகர் சூர்யாவின் லுக்கைப் பார்த்து ரசிகர்கள் சொக்கிப்போனது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி இருந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது போல நாயகியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டேவின் நடிப்பும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே நடிகர் சூர்யா தனது 45-வது படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்படி நடிகர் சூர்யா தனது 45-வது படத்திற்காக ஆர்.ஜே. பாலாஜி உடன் கூட்டணி வைத்தார். ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கிய இந்தப் படத்திற்கு கருப்பு என்று பெயர் வைக்கப்பட்டதும் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் சூர்யாவிற்கு ஜோடியாக நடிப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் சேர்வது ரசிகர்களை கொண்டாட வைத்தது குறிப்பிடத்தக்கது.

கருப்பு படம் எப்போதான் ரிலீஸ் ஆகும்?

சூர்யாவின் ரெட்ரோ படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவின் கருப்பு படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது படம் பண்டிகை நாளில்தான் வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ரசிகர்கள் அதனைத் தொடர்ந்து வரும் தீபாவளி பண்டிகையில் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்புகள் குறைவு. பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

Also Read… தமிழில் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை சாய் பல்லவி – வைரலாகும் தகவல்

இதனைத் தொடர்ந்து படம் பொங்கல் பண்டிகையில் விஜயின் ஜன நாயகன் படத்துடன் போட்டி போடுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் படம் 2026 கோடையில் தான் வெளியாகும் என்று புதி செய்தி ஒன்று சினிமா வட்டாரத்தில் பரவி வருகின்றது. இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… டைரக்டர் வெற்றிமாறன் டூ டாக்டர் வெற்றிமாறன் – பட்டம் வழங்கி கௌரவித்த ஐசரி கணேஷ்

Related Stories
தெலுங்கு சினிமாவிலும் வில்லனாக அறிமுகம் ஆன சாண்டி – வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்
தனது 2-வது மகனின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த் – வைரலாகும் போட்டோஸ்
கவர்ச்சி உடை.. அந்த இயக்குநரின் படம்.. பல ஆண்டுகள் கழித்து பகீர் கிளப்பிய நடிகை மோகினி!
ராவோடு ராவா கோட்டையில உக்காந்துட்டு புதுபுது சட்டம் போடுவீங்க, தூங்கி எழுந்து பாத்தா நாங்க குற்றவாளியா? – தண்டகாரண்யம் படத்தின் ட்ரெய்லர் இதோ!
மேடையில் மாறி மாறி கலாய்த்துக்கொண்ட ரஜினிகாந்த் – இளையராஜா… வைரலாகும் வீடியோ
துணிவு படம் எனது சினிமா வாழ்க்கையே மாற்றியது – இயக்குநர் எச். வினோத்