கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்
Suriyas Karuppu Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் கருப்பு படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

கருப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய ரசிகர்களிடமும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறார். அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படமும் தென்னிந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த 2025-ம் ஆண்டே நடிகர் சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக காத்திருந்த படம் கருப்பு. இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்தும் தொடர்ந்து படம் வெளியாவதில் அடுத்தடுத்த சிக்கல்கள் காரணமாக தொடர்ந்து வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் படம் இந்த 2026-ம் ஆண்டில் நிச்சயமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடித்து உள்ளதால் இவர்களின் ஜோடியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஏப்ரல் மாதம் வெளியாகும் சூர்யாவின் கருப்பு படம்:
இந்த நிலையில் இந்தப் படம் முன்னதாக ஜனவரி மாதம் 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று தயாரிபாளர்கள் கூறியதாக திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகி உள்ள தகவலின்படி படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.
Also Read… இப்போ என் என்ட்ரி… ஹீரோ என்ட்ரி… மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர் வெளியானது
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Karuppu Team is planning to release the movie in April 2026 🎬
– The second single from the film is expected to be released in February, along with the official movie release date 🎶#Suriya | #Suriya47 | #Suriya46 pic.twitter.com/FuDZq0hwZ0
— Movie Tamil (@_MovieTamil) January 16, 2026
Also Read… தலைவர் 173 படம் குறித்து முக்கிய அப்டேட்டை சொன்ன ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ