ஏப்ரல் மாதம் வெளியாகிறதா சூர்யாவின் கருப்பு படம்? வைரலாகும் தகவல்

Karuppu Movie Release Update: தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கருப்பு. நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ளது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் மாதம் வெளியாகிறதா சூர்யாவின் கருப்பு படம்? வைரலாகும் தகவல்

கருப்பு

Published: 

01 Feb 2026 18:36 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படம் சூர்யாவின் நடிப்பில் வெளியான 44-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தனது 45-வது படத்திற்காக நடிகர் சூர்யா இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி உடன் கூட்டணி வைத்தார். இந்தப் படம் ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பின் போதே தொடங்கியது. தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டே முடிவடைந்து இருந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு தேவையான சில காட்சிகள் படமாக்க வேண்டும் என்பதற்காக படத்தின் ஷூட்டிங் மீண்டும் நடந்தது என்று படக்குழு தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அவரது 46 மற்றும் 47-வது படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்ற நிலையில் இந்த 45-வது படமான கருப்பு படம் திரையரங்குகளில் இன்னும் வெளியாகாதது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தப் படம் பண்டிகை காலத்தில் தான் வெளியாகும் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்த காரணமாக ஒவ்வொரு பண்டிகையின் போதும் படம் வெளியாகுமா என்று ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஏப்ரல் மாதம் வெளியாகிறதா சூர்யாவின் கருப்பு படம்?

இந்த நிலையில் இந்த கருப்பு படம் கடந்த பொங்கல் பண்டிகைகே வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் வெளியாகவில்லை. இந்த நிலையில் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி இந்தப் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக வாய்ப்பு உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… With Love: ‘வித் லவ்’ படத்தின் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல தொலைக்காட்சி?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அல்லு அர்ஜுனுக்கு கதை சொன்ன நெல்சன் – உண்மையை உடைத்த பிரபல இயக்குநர்!

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி