அட்லி – அல்லு அர்ஜுன் படத்தில் 6 நாயகிகளா? வைரலாகும் தகவல்!

#AA22xA6: நடிகர் அல்லு அர்ஜுனின் 22-வது படத்தை இயக்க இயக்குநர் அட்லி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த மாதம் படக்குழு அறிவித்தது. படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகின்றது.

அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் 6 நாயகிகளா? வைரலாகும் தகவல்!

அல்லு அர்ஜுன், அட்லி

Published: 

27 May 2025 11:21 AM

 IST

நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடிப்பில் இயக்குநர் அட்லி (Atlee) இயக்கத்தில் உருவாகும் படத்தின் அறிவிப்பு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி 2025-ம் ஆண்டு அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது. அதனை தொடர்ந்து படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்தப் படம் சயின்ஸ் பிக்சனை மையமாக வைத்து எடுக்க உள்ளதாக முன்னதாக தகவல்கள் பரவியது. மேலும் முழுக்க முழுக்க சயின்சை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்குநர் அட்லி பிரமாண்டமாக எடுக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிக்க உள்ள நாயகிகள் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தில் 6 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

புஷ்பா படத்தால் வெற்றிநடைப் போடும் அல்லு அர்ஜூன்:

நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். ஆனால் இவரை பான் இந்திய அளவில் ஏன் உலக அளவில் பிரபலம் ஆக்கியது புஷ்பா படம் என்றே சொல்லலாம். இயக்குநர் சுகுமாரன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாந்து புஷ்பா படம். இந்த இரண்டு பாகங்களிலும் நாயகனாக அல்லு அர்ஜுன் நடித்து இருந்தார்.

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

முதல் பாகத்தில் ஒரு சாதாரண மரம் வெட்டும் கூலி தொழிலாளியாக வரும் அல்லு அர்ஜுன் வாழ்க்கையில் அடுத்தடுத்து பெரிய அளவில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் பெரிய கடத்தல் மன்னனாக மாறுகிறார். கூலி தொழிலாளியிலான அல்லு அர்ஜுன் எப்படி பெரிய கடத்தல் மன்னனாக மாறுகிறார் என்பது முதல் பாகம் ஆகும்.

புஷ்பா 2 படத்தில் பெரிய கேங்ஸ்டராக அந்த மாநிலத்தையே கட்டுக்குள் வைத்திருக்கும் நபராக நடித்திருந்தார் நடிகர் அல்லு அர்ஜுன். இதில் மத்தியில் இருக்கும் அரசியல் தலைவரின் குடும்பத்துடன் அல்லு அர்ஜுனுக்க்கு பகை ஏற்படுகின்றது. இது அடுத்த பாகத்திற்காக தொடக்கமாக இயக்குநர் முடித்து வைத்துள்ளார்.

இந்த இரண்டு பாகங்களும் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தென்னிந்திய சினிமாவில் அதிக வரவேற்பைப் பெற்றதை விட வட மாநிலங்களில் இந்த படங்களுக்கான வரவேற்பு அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த பிரபலம்:

நடிகர் அல்லு அர்ஜுன் சமீபத்தில் WAVES 2025-ல் கலந்துகொண்டார். அப்போது பேசிய அல்லு அர்ஜுன் இந்த புஷ்பா படத்தின் மூலம் தனது முகம் பலருக்கும் தெரிகிறது என்று பேசியிருந்தார். மேலும் தனது சினிமா வாழ்க்கை குறித்தும் புஷ்பா படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கை பெரிய அளவில் வெற்றியடைந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Arasan: அரசனின் எழுச்சி.. அரசன் புரோமோவின் BTS வீடியோவை வெளியிட்ட சிலம்பரசன்!
பராசக்தி ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர்கள் கூறுவார்கள் – இயக்குநர் சுதா கொங்கரா
Jana Nayagan: அரசியல் நிகழ்ச்சியல்ல தளபதி திருவிழா இசைவெளியீட்டு விழா.. அதிரடி எச்சரிக்கை கொடுத்த மலேசிய போலீஸ்!
இளையராஜா – ஏ.ஆர். ரஹ்மானுக்கு அடுத்து ஜிவி. பிரகாஷ்தான்.. புகழ்ந்து தள்ளிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.!
Kiara Advani: யாஷின் டாக்சிக் படத்தில் இணைந்த கியாரா அத்வானி.. வெளியானது கேரக்டர் அறிமுக போஸ்டர்!
ஒரு கனவுடன் தொடங்கிய பயணம் பல இதயங்களில் இடம் பிடித்தது – திரையரங்குகளில் வெளியாகி 7 ஆண்டுகளைக் கடந்தது கனா படம்
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்... அவருக்கு உடலில் இப்படி ஒரு பிரச்சனையா?
ஹிமாச்சலின் வறண்ட டிசம்பர்.. வெப்பமயமாதலால் பனி இல்லாத நிலை!
ஜிபிஎஸ் டிராக்கருடன் கிடைத்த வெளிநாட்டு கடற்புறா - பரபரப்பு தகவல்
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்